இஞ்சியுடன் இலவங்கப்பட்டை சேர்த்து தண்ணீர் தயாரித்து குடிப்பது உடலுக்கு நன்மை பயக்கும். இதில் இஞ்சி இலவங்கப்பட்டை தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்
நீரிழிவு நோய்க்கு
இஞ்சி இலவங்கப்பட்டை நீரில் நிறைந்துள்ள பண்புகள் உடலில் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது. இவை நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது
கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க
உடலில் உள்ள அதிகளவிலான கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க இஞ்சி இலவங்கப்பட்டை தண்ணீர் அருந்துவது மிகுந்த நன்மை பயக்கும்
வீக்கம் குறைய
இஞ்சி, இலவங்கப்பட்டை இரண்டுமே அழற்சி எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளது. இவை வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது
நோயெதிர்ப்புச் சக்தி அதிகரிக்க
இஞ்சி இலவங்கப்பட்டை தண்ணீரை அருந்துவது உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதன் மூலம் நாள்பட்ட நோய்களிலிருந்து விடுபடலாம்
மூட்டு வலி
இஞ்சி மற்றும் இலவங்கப்பட்டையுடன் கூடிய வெதுவெதுப்பான நீர் மூட்டு வலிக்கு நிவாரணம் அளிக்கிறது
மாதவிடாய் வலி
மாதவிடாய் வலியிலிருந்து நிவாரணம் தரும் வகையில் இஞ்சி இலவங்கப்பட்டை தண்ணீரை அருந்தலாம். இதற்கு வெதுவெதுப்பான இஞ்சி இலவங்கப்பட்டை நீரைத் தயார் செய்து குடிக்கலாம்