இரவு தூங்கும் முன்னதாக கெமோமில் டீ அருந்துவது உடல் ஆரோக்கியத்திற்குப் பல நன்மைகளைத் தருகிறது. இதில் நிம்மதியான இரவு தூக்கத்திற்கு கெமோமில் டீ அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் சிலவற்றைக் காணலாம்
இரவு தூக்கத்திற்கு
கெமோமில் தேநீரில் அபிஜெனின் என்ற கலவை உள்ளது. இது மனதை அமைதிப்படுத்த உதவக்கூடிய ஒரு இயற்கையான கலவையாகும். இது நல்ல இரவு தூக்கத்தைத் தருகிறது
வீக்கத்தைக் குறைக்க
கெமோமில் டீயில் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் உள்ளது. இது உடலில் ஏற்படும் வலிகளைக் குறைக்கவும், ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்தவும் உதவுகிறது
சீரான இரத்த சர்க்கரைக்கு
சில ஆய்வுகளில் வழக்கமான கெமோமில் தேநீர் இரத்த சர்க்கரை அளவை உறுதிப்படுத்த உதவுகிறது
அஜீரணத்திலிருந்து விடுபட
மாலையில் வீக்கம் அல்லது அஜீரணம் போன்ற தொந்தரவுகள் ஏற்பட்டால், கெமோமில் டீ அருந்துவது ஒரு மென்மையான மீட்பாக அமைகிறது
இதய ஆரோக்கியத்திற்கு
கெமோமில் டீயில் ஃபிளாவனாய்டுகள் உள்ளது. இது இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் சிறந்த இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது
சரும ஆரோக்கியத்திற்கு
கெமோமில் தேநீரில் ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளது. இது சரும சேதத்தை எதிர்த்துப் போராடவும், சருமத்தை பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது