கேரட் பீட்ரூட்
கேரட் மற்றும் பீட்ரூட் இரண்டுமே குளிர்காலத்தில் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதன் ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு அற்புத வலிமையைத் தருகிறது. குளிர்காலத்தில் கேரட் பீட்ரூட் சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்
இரும்புச்சத்து நிறைந்தது
இவை இரண்டிலுமே ஏராளமான இரும்புச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது உடலுக்குப் பல வழிகளில் நன்மை பயக்கும். மேலும், இதில் வைட்டமின் பி, சி போன்ற ஊட்டச்சத்துக்களும் உள்ளது
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க
குளிர் காலத்தில் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படும் பொதுவான பிரச்சனையாகும். இந்நிலையில், குளிர்ந்த காலநிலையில் கேரட், பீட்ரூட் சாறு குடிப்பது மிகுந்த நன்மை பயக்கும்
இரத்த சோகையை நீக்க
பீட்ரூட் சாற்றில் இரும்பு மற்றும் ஃபோலேட் நிறைந்துள்ளது. இவை இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்து ஆரோக்கியமான ஹீமோகுளோபின் அளவை பராமரிக்க உதவுகிறது. இதன் மூலம் இரத்த சோகையை நீக்க உதவுகிறது
செரிமான ஆரோக்கியத்திற்கு
கேரட் பீட்ரூட் சாற்றில் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது வீக்கத்தைக் குறைக்கவும், செரிமான ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும்
மூளை செயல்பாட்டிற்கு
பீட்ரூட் சாற்றில் உள்ள நைட்ரேட்டுகள் அறிவாற்றல் செயல்பாடு மற்றும் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது
சரும ஆரோக்கியத்திற்கு
கேரட்டில் பீட்டா கரோட்டின் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சருமத்தை சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது. பீட்ரூட் சாற்றில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து உள்ளது. இது கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கவும், சருமத்திற்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது