வெறும் வயிற்றில் ஏலக்காய் தண்ணீர் குடிச்சா இந்த பிரச்சனைகள் எல்லாம் வராதாம்

By Gowthami Subramani
20 Feb 2024, 04:16 IST

ஏலக்காய் நீர்

பச்சை ஏலக்காய் சேர்ப்பது உணவின் சுவையை அதிகரிப்பதுடன், வாய் துர்நாற்றத்தைப் போக்கவும் உதவுகிறது. வெறும் வயிற்றில் இந்த பச்சை ஏலக்காய் நீரை உட்கொள்வது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது

செரிமான ஆரோக்கியத்திற்கு

வெறும் வயிற்றில் பச்சை ஏலக்காய் நீரை அருந்துவது செரிமான பிரச்சனைகளைப் போக்க உதவுகிறது. இது குடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். மேலும் வயிற்று உப்புசம், அஜீரணம் போன்ற பிரச்சனைகளைக் குறைக்கவும், நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது

நீரிழிவு நோய்க்கு

இதில் நல்ல அளவிலான நார்ச்சத்துக்கள் உள்ளது. இவை உடலில் இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதற்கு பச்சை ஏலக்காயை கஷாயம் செய்து குடிக்கலாம்

சரும ஆரோக்கியம்

ஏலக்காய நீரை குடிப்பது சருமத்திற்கு நன்மை பயக்கும். இது சரும எரிச்சல் மற்றும் எரியும் உணர்விலிருந்து நிவாரணம் தருகிறது

கண் பார்வை மேம்பாட்டிற்கு

இந்த நீரை அருந்துவது பார்வையை மேம்படுத்த உதவுகிறது. இந்த நீர் கண்களுக்குக் குளிர்ச்சியைத் தருவதுடன், கண்களில் ஏற்படும் அரிப்பு, எரிச்சலைக் குறைக்கிறது