சங்கு பூ டீ ப்ளூ டீ என்றும் அழைக்கப்படுகிறது. இது அதன் துடிப்பான நீல நிறம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற உள்ளடக்கம் ஆகியவற்றால் அறியப்படுகிறது. இதில் சங்கு பூ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்
எடையிழப்புக்கு உதவ
சங்கு பூ தேநீர் அருந்துவது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும், கொழுப்பை எரிக்கவும் உதவுகிறது. இது உடல் எடையிழப்பு பயணத்திற்கு முக்கியமானதாகும்
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த
சங்கு பூ டீ இதய செயல்பாட்டை மேம்படுத்துவதன் மூலம் இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது. இதன் மூலம் இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது
சரும ஆரோக்கியத்திற்கு
ப்ளூ டீ-யில் ஆன்டி ஆக்ஸிடன்டுகள் நிறைந்துள்ளது. இவை சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும் வயதான அறிகுறிகளைக் குறைக்கிறது
மூளை செயல்பாட்டிற்கு
சங்கு பூ டீ அருந்துவது மூளையின் செயல்பாட்டை அதிகரித்து, அறிவாற்றல் திறனை அதிகரிக்கிறது. மேலும் இது நினைவகத்தை மேம்படுத்துகிறது. இவை நாள் முழுவதும் கூர்மையாக வைத்திருக்க உதவுகிறது
மன அழுத்தத்தைக் குறைக்க
சங்கு பூ டீ குடிப்பது பதட்டம் மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கிறது. இதற்கு இதில் மனநலத்தை மேம்படுத்தும் அமைதியான பண்புகள் இருப்பதே காரணமாகும்