வாழை இலை தேநீர் குடிப்பதில் இத்தனை நன்மைகளா?

By Gowthami Subramani
01 Oct 2024, 17:44 IST

வாழை இலைகளில் உணவு உட்கொள்வது மிகுந்த நன்மை பயக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், வாழை இலை டீ பற்றி தெரியுமா? வாழை இலை டீ அருந்துவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காணலாம்

எடை இழப்பை அதிகரிக்க

வாழை இலையில் தேநீர் அருந்துவது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இது கொழுப்பு எரிப்பதை ஊக்குவிப்பதன் மூலம் எடை மேலாண்மைக்கு உதவுகிறது

செரிமான ஆரோக்கியத்திற்கு

இந்த தேநீர் ஆரோக்கியமான குடல் இயக்கத்தை ஊக்குவிப்பதன் மூலம் செரிமானத்திற்கு உதவுகிறது. மேலும் வீக்கம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை நீக்குகிறது

நச்சு நீக்கியாக

வாழை இலை டீ உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. இதன் மூலம் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துகிறது

இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க

வாழை இலை தேநீர் இரத்த சர்க்கரை அளவை சீராக வைக்க உதவுகிறது, இது நீரிழிவு நோயாளிகள் அல்லது நீரிழிவு நோய் ஆபத்தில் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

அழற்சியைக் குறைக்க

இயற்கையாகவே வாழை இலை தேநீர் ஆனது அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது உடலில் ஏற்படும் அழற்சியைக் குறைக்கவும் வலியிலிருந்து நிவாரணம் அளிக்கவும் உதவுகிறது

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க

இந்த டீயில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. இது உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும், தொற்று நோய்களிலிருந்து உடலைப் பாதுகாக்கவும் உதவுகிறது

சரும ஆரோக்கியத்திற்கு

வாழை இலையில் உள்ள பல்வேறு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்றவை சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இவை சருமத்தை இளமையாக வைக்க உதவுகிறது