வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு அருந்துவது உடல் ஆரோக்கியத்திற்குப் பல்வேறு நன்மைகளைத் தருகிறது. இதில் காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்
உடல் உஷ்ணம் குறைய
தினசரி காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு அருந்துவது உடலில் உள்ள உஷ்ணத்தைக் குறைக்க உதவுகிறது. இது பித்தம் தொடர்பான பல்வேறு வியாதிகள் குணமாகவும் உதவுகிறது
வயிற்று பிரச்சனைகள் குணமாக
வயிறு புண்கள் இன்று பலரும் சந்திக்கும் பொதுவான பிரச்சனையாகும். இந்த சாற்றை குடித்து வருவது நாளடைவில் வயிற்றுப் புண்களைக் குறைக்கிறது. மேலும், இது மலச்சிக்கல் பிரச்சனையைக் குணமாக்கவும் உதவுகிறது
நோயெதிர்ப்புச் சக்தி அதிகரிக்க
அருகம்புல் சாற்றில் உள்ள உயிர்வேதியியல் கலவைகள் உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது
கண் பார்வை ஆரோக்கியத்திற்கு
தினசரி காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் ஜூஸ் உடன் தண்ணீர் சேர்த்து காய்ச்சி வடிகட்டி, அதில் சிறிதளவு கற்கண்டு சேர்த்து குடித்து வருவதன் மூலம் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படுவதற்கான அபாயத்தைக் குறைக்கிறது. எனவே இது கண் பார்வை ஆரோக்கியத்திற்கு உதவுகிறது
அடிவயிற்று வலி நீங்க
மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு உடலில் ஏற்படும் பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் பெற அருகம்புல் சாறு பெரிதும் உதவுகிறது. குறிப்பாக, இதன் மூலம் அடிவயிற்று வலியிலிருந்து நிவாரணம் பெறலாம்
சரும ஆரோக்கியத்திற்கு
அருகம்புல் சாறு அருந்துவது அரிக்கும் தோலழற்சி, தடிப்புத் தோல் அழற்சி மற்றும் பூஞ்சை தொற்று போன்ற தோல் நோய்களைக் குணப்படுத்த உதவுகிறது. மேலும் இது புற ஊதா கதிர்களில் இருந்து உங்கள் சருமத்தைப் பாதுகாக்கிறது