வெறும் வயிற்றில் 2 கறிவேப்பிலையை மென்று சாப்பிடுவதன் நன்மைகள்!

By Devaki Jeganathan
06 Sep 2024, 11:05 IST

லினாலூல், ஆல்பா-டெர்பினீன், மைர்சீன், மஹானிம்பைன், கேரியோஃபிலீன், முராயனோல் மற்றும் ஆல்பா-பினீன் போன்ற பல சேர்மங்கள் கறிவேப்பிலையில் உள்ளது. இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. வெறும் வயிற்றல் 2 2 கறிவேப்பிலையை மென்று சாப்பிடுவதன் நன்மைகள் பற்றி இங்கே பார்க்கலாம்.

நோய் எதிர்ப்பு சக்தி

கறிவேப்பிலையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும், நோயிலிருந்து மீளவும் உதவுகிறது. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கவும், நோயை உண்டாக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடவும் உதவுகின்றன.

கண்பார்வைக்கு நல்லது

இதில் உள்ள வைட்டமின் ஏ கண் பார்வையை மேம்படுத்த உதவுகிறது. இந்த இலைகளை தினமும் வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டு வர கண் பார்வை மேம்படும்.

எடை குறையும்

கறிவேப்பிலையில் உள்ள கூறுகள் உடல் பருமனை எதிர்த்துப் போராட உதவும் ஆன்டி-ஒபிசிட்டி மற்றும் லிப்பிட் குறைக்கும் விளைவுகளைக் கொண்டுள்ளன. இது உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகிறது.

இதய ஆரோக்கியம்

வைட்டமின் சி, வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் ஈ ஆகியவை இதில் காணப்படுகின்றன. இந்த இலைகளை வெறும் வயிற்றில் மென்று சாப்பிடுவது கொலஸ்ட்ரால் குறைகிறது மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

முடி உதிர்வதை நிறுத்தும்

முடி உதிர்தல் பிரச்சனையால் நீங்கள் சிரமப்பட்டால், தினமும் 2 கறிவேப்பிலையை வெறும் வயிற்றில் மென்று சாப்பிட வேண்டும். இதில், உள்ள பண்புகள் முடி பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.

சர்க்கரை நோய்

வெறும் வயிற்றில் 2 கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். நீரிழிவு நோயாளிகளுக்கு கறிவேப்பிலை நன்மை பயக்கும்.

சிறந்த செரிமானம்

கறிவேப்பிலையில் என்சைம்கள் காணப்படுகின்றன. இது செரிமானத்தை மேம்படுத்துகிறது. இந்த இலைகளை காலையில் மென்று சாப்பிட்டால் வாயு, அமிலத்தன்மை மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.