சம்மர் சீசனில் ப்ரோக்கோலியை ஏன் சாப்பிடணும் தெரியுமா?

By Gowthami Subramani
20 Mar 2025, 17:26 IST

ப்ரோக்கோலியின் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் நச்சு நீக்கும் சேர்மங்கள் போன்றவை கோடைக்காலத்தில் வெப்பம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது. இதில் கோடைக்காலத்தில் ப்ரோக்கோலி சாப்பிடுவதால் கிடைக்கும் முக்கிய நன்மைகள் சிலவற்றைக் காணலாம்

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த

ப்ரோக்கோலியில் வைட்டமின் ஏ, சி, கே, ஃபோலேட், கால்சியம் மற்றும் பொட்டாசியம் உள்ளிட்ட வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளது. மேலும், இதில் நார்ச்சத்துக்களும், சல்போராபேன் போன்ற பைட்டோ கெமிக்கல்களும் நிறைந்து காணப்படுகிறது

எடை மேலாண்மைக்கு

ப்ரோக்கோலி உணவு நார்ச்சத்துக்கள் நிறைந்த நல்ல மூலமாகும். இது குடல் ஆரோக்கியம் மற்றும் செரிமான ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். மேலும், இது கொழுப்பின் அளவைக் குறைத்து, வயிறு நிரம்பிய உணர்வை ஊக்குவிப்பதன் மூலம் எடை மேலாண்மைக்கு உதவுகிறது

இதய ஆரோக்கியத்திற்கு

இதில் உள்ள நார்ச்சத்துக்கள், பொட்டாசியம் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் போன்றவை இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இதில் பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை சீராக்கவும், நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் கொழுப்பின் அளவைக் குறைத்து தமனி சேதத்தைத் தடுக்க உதவுகின்றன

இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்த

ப்ரோக்கோலியில் குறைந்த கிளைசெமிக் குறியீடு மற்றும் நார்ச்சத்துக்கள் இருப்பதால், இவை இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இது இரத்த சர்க்கரை அதிகரிப்பைத் தடுக்க விரும்புவோர்க்கு அல்லது நீரிழிவு நோயாளிகளுக்கும் ஒரு நல்ல தேர்வாக அமைகிறது

எலும்பு ஆரோக்கியத்திற்கு

ப்ரோக்கோலியில் வைட்டமின் கே, கால்சியம் உள்ளது. இவை இரண்டுமே வலுவான மற்றும் ஆரோக்கியமான எலும்புகளை பராமரிக்க அவசியமாகும். ப்ரோக்கோலியின் வழக்கமான நுகர்வு எலும்பு அடர்த்தியை மேம்படுத்தவும், ஆஸ்டியோபோரோசிஸைத் தடுக்கவும் உதவுகிறது

ஃப்ரீ ரேடிக்கல்களைத் தடுக்க

சல்போராபேன், குளுக்கோராபனின் மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகள் ப்ரோக்கோலியில் உள்ளது. இந்த சேர்மங்கள் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து செல்களைப் பாதுகாக்கவும், புற்றுநோய், இதய நோய் போன்ற நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது

சரும ஆரோக்கியத்திற்கு

ப்ரோக்கோலியில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் குறிப்பாக, வைட்டமின் சி கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கவும், சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் புற ஊதா கதிர்வீச்சால் ஏற்படும் சரும சேதத்திலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது. இதன் மூலம் ஆரோக்கியமான சருமத்தை மேம்படுத்த உதவுகிறது