பால் டீயை விட பிளாக் டீ குடிப்பது இவ்வளவு நல்லதா?

By Devaki Jeganathan
16 Mar 2025, 21:49 IST

பிளாக் டீ குடிப்பதால் பல நன்மைகள் உள்ளன. குறிப்பாக இதய ஆரோக்கியம், செரிமானம் மற்றும் மன அழுத்தம் போன்றவற்றுக்கு. இது ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது. மேலும், இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.

இதய ஆரோக்கியம்

பிளாக் டீயில் உள்ள ஃபிளாவனாய்டுகள் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கலாம், இரத்த அழுத்தத்தைக் குறைக்கலாம். மேலும், சிறந்த இரத்த நாளச் செயல்பாட்டை ஊக்குவித்து, இருதய பிரச்சினைகளின் அபாயத்தைக் குறைக்கலாம்.

செரிமான ஆரோக்கியம்

பிளாக் டீயில் டானின்கள் உள்ளன. அவை செரிமானத்திற்கு உதவும் மற்றும் வயிற்று உப்புசம் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற செரிமான பிரச்சனைகளை குறைக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி

பிளாக் டீயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன. பிளாக் டீ மூளை செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

எடை இழப்பு

பிளாக் டீ குடிப்பதால் பசியைக் குறைக்கவும், வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தவும். எடை இழப்பை ஊக்குவிக்கவும் உதவும் என்று கூறப்படுகிறது.

புற்றுநோய் ஆபத்து

பிளாக் டீயில் உள்ள சில கூறுகள் புற்றுநோய் செல்களைக் கொல்ல உதவும். பிளாக் டீ மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.

நீரிழிவு நோய்

பிளாக் டீ நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும், அதற்கான அபாயத்தைக் குறைக்கவும் உதவும். பிளாக் டீ பல்லின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.