நெல்லிக்காய் மற்றும் மஞ்சள் இரண்டுமே பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்ததாகும். இவையிரண்டையும் ஒன்றிணைப்பது ஒரு சக்திவாய்ந்த கலவையை உருவாக்குகிறது. ஆம்லா மஞ்சள் கலவையை உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்
செரிமானத்தை மேம்படுத்த
ஆம்லாவில் நிறைந்துள்ள நார்ச்சத்துக்கள் செரிமானத்திற்கு உதவுவதுடன், மலச்சிக்கலைத் தடுக்கிறது. மஞ்சள் உடலில் பித்த உற்பத்தியைத் தூண்டி, செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், கொழுப்பு செரிமானத்திற்கும் உதவுகிறது
எடை மேலாண்மை
இந்த கலவையில் நிறைந்துள்ள பண்புகள் உடலில் உள்ள கொழுப்பை இழக்க ஊக்குவிக்கவும், மெட்டாபாலிசத்தை அதிகரிக்கவும், உடல் பருமன் தொடர்பான வீக்கத்தைக் குறைத்து எடை மேலாண்மைக்கு உதவுகிறது
இதய ஆரோக்கியம்
மஞ்சள் மற்றும் நெல்லிக்காயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் வீக்கம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. இவை இரத்த ஓட்டத்தை சீராக வைப்பதுடன், கொலஸ்ட்ரால் அளவையும் குறைத்து இதயத்தைப் பாதுகாக்கிறது
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க
ஆம்லாவில் அதிகளவிலான வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. மேலும், மஞ்சளும் நோயெதிர்ப்பு செயல்பாட்டிற்கு உதவுவதுடன், நோய்த்தொற்றுக்களுக்கு எதிராக உடலைப் பாதுகாக்கிறது
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த
ஆம்லா, மஞ்சள் இரண்டுமே ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்த சிறந்த ஆதாரங்களாகும். நெல்லிக்காயில் வைட்டமின் சி மற்றும் மஞ்சளில் குர்குமின் நிறைந்துள்ளது. இவை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்து உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது
சரும ஆரோக்கியத்திற்கு
மஞ்சள், நெல்லிக்காய் இரண்டும் சரும ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இவற்றில் உள்ள ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் சருமத்தைப் பிரகாசமாக வைக்கவும், முகப்பருவைக் குறைத்தல், வயதான அறிகுறிகளை தாமதப்படுத்துதல் போன்றவற்றிற்கும் உதவுகிறது
புற்றுநோய்க்கு எதிராக
மஞ்சள் மற்றும் நெல்லிக்காயில் காணப்படும் கலவைகள், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்க உதவுகிறது. மேலும் சில சில வகையான புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்கும் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது
குறிப்பு
மஞ்சள் நெல்லிக்காய் கலவை இந்த நன்மைகளைத் தந்தாலும், உணவில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்யும் முன் சுகாதார நிபுணரைக் கலந்தாலோசிப்பது அவசியமாகும்