காலையில் ஒரு டம்ளர் நீரில் ஒரு சிட்டிகை ஜாதிக்காய் சேர்த்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

By Gowthami Subramani
29 Apr 2025, 07:25 IST

ஜாதிக்காய் பல்வேறு சமையல் உணவுகளில் அதன் சூடான, கொட்டை சுவைக்காகப் பயன்படுத்தப்படும் ஒரு பிரபலமான மசாலாப் பொருளாகும். இது ஏராளமான ஆரோக்கிய நன்மைகளால் நிறைந்ததாகும். காலையில் ஒரு டம்ளர் நீரில் ஒரு சிட்டிகை ஜாதிக்காய் சேர்த்து குடிப்பதால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காண்போம்

செரிமானத்தை மேம்படுத்த

இது செரிமான நொதிகளின் சுரப்பைத் தூண்டவும், உணவை உடைக்கவும் உதவுகிறது. இதன் மூலம் வீக்கம், வாயு மற்றும் மலச்சிக்கல் போன்ற பொதுவான செரிமான பிரச்சனைகளைப் போக்குகிறது

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க

ஜாதிக்காயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அத்தியாவசிய எண்ணெய்கள் நிறைந்துள்ளன. இவை உடலில் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதன் மூலம் உடலை தொற்றுகளிலிருந்து பாதுகாக்கிறது. மேலும் இது ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது

வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க

ஜாதிக்காயின் அழற்சி எதிர்ப்பு மற்றும் வலி நிவாரணி பண்புகள் வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. குறிப்பாக, மூட்டு வலி அல்லது தசை வலியால் அவதிப்படுபவர்களுக்கு இது மிகவும் நன்மை பயக்கும்

மூளை ஆரோக்கியத்திற்கு

ஜாதிக்காயில் உள்ள மிரிஸ்டிசின் மற்றும் மாசெலிக்னன் போன்ற அத்தியாவசிய எண்ணெய்கள் நரம்பு பாதுகாப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இவை நினைவாற்றலை மேம்படுத்தவும், அல்சைமர் போன்ற நரம்பு சிதைவு நோய்களிலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது

தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த

ஜாதிக்காய் அதன் அமைதிப்படுத்தும் விளைவுகளுக்கு பெயர் பெற்றதாகும். இதில் உள்ள மிரிஸ்டிசின் மற்றும் மெக்னீசியம் போன்ற சேர்மங்கள் தளர்வைத் தூண்டவும் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன. தூங்கும் முன் ஜாதிக்காய் தண்ணீர் குடிப்பது தூக்கமின்மையால் போராடுபவர்களுக்கு நன்மை பயக்கும்