காளான் சாப்பிடுவதால் கிடைக்கும் அழகு நன்மைகள்

By Gowthami Subramani
10 Nov 2024, 21:26 IST

காளான் உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும். ஆனால், இது ஆரோக்கியமான சருமத்திற்கும் உதவும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இதில் காளான் சாப்பிடுவதால் கிடைக்கும் சில அழகு நன்மைகளைக் காணலாம்

புற ஊதாக் கதிர்களிலிருந்து பாதுகாப்பு

காளான்களில் எர்கோதியோனைன் என்ற ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்ட ஒரு சக்திவாய்ந்த அமினோ அமிலம் உள்ளது. இது சூரியன் மற்றும் டிஎன்ஏ-ஆல் சேதமடைந்த செல்களை சரிசெய்யவும், சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு எதிராக பாதுகாப்பையும் வழங்குகிறது

நீரேற்றத்தைத் தர

சில வகையான காளான்கள் உண்ணக்கூடியவை மற்றும் ஒமேகா-3 போன்ற பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் நிறைந்தவையாகும். இந்த கொழுப்புகளில் உள்ள பாலிசாக்கரைடுகள் சருமத்தை மென்மையாக, மிருதுவாக மற்றும் நீரேற்றமாக வைக்க உதவுகிறது

நிறத்தை மேம்படுத்த

காளானில் உள்ள மெலனின் ஆனது சருமத்தில் இருக்கும் நிறமியைப் பாதுகாக்கிறது. மேலும் இதில் கோஜிக் அமிலம் என்ற இயற்கையான கலவை உள்ளது. இது கரும்புள்ளிகளை சரி செய்து சருமத்தை பிரகாசமாக வைக்க உதவுகிறது

வயதான அறிகுறிகளை தாமதப்படுத்த

காளானில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த சேர்மங்கள் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்து செல் கட்டமைப்பில் முன்னேற்றத்தைத் தருகிறது. இவை வயதான செயல்முறையைக் குறைக்கிறது

முகப்பருக்களை நிர்வகிக்க

இதில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் நிறைந்த பீட்டா- குளுக்கன்ஸ், தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா மற்றும் தோல் நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராட உதவுகிறது. இதன் மூலம் பரு தழும்புகள் மற்றும் முகப்பரு பிரச்சனைகளைக் குறைக்கிறது

குறிப்பு

காளான்கள் ஆரோக்கியமானது எனினும், அனைத்து காளான்களும் ஆரோக்கியமாக இருக்க முடியாது. ஏனெனில், சில காட்டு காளான்கள் நச்சுத்தன்மை வாய்ந்தவையாகவும், சாப்பிடக் கூடாததாகவும் இருக்கலாம். எனவே உடலுக்கு காளான்களுக்கு ஒவ்வாமை இல்லை என்பதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்