பாதாம் பால் குடிப்பது எவ்வளவு நல்லது தெரியுமா?

By Devaki Jeganathan
12 Sep 2024, 11:15 IST

பாதாமில் புரதம், வைட்டமின் ஈ, நார்ச்சத்து மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளது. இதனை பாலுடன் சேர்த்து சாப்பிட்டால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். பாதாம் பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இதய ஆரோக்கியம்

பாதாம் பாலில் ஆரோக்கியமான மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் மற்றும் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது. இது கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் வீக்கத்தைக் குறைக்கவும், இதயத்தைப் பாதுகாக்கவும் உதவும்.

தோல் ஆரோக்கியம்

பாதாம் பாலில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது. இது சருமத்தின் ஈரப்பதம் மற்றும் நெகிழ்ச்சித்தன்மையை அதிகரிக்கும் மற்றும் முடி சேதத்தை குறைக்கும்.

எடை மேலாண்மை

பாதாமில் அதிக புரதச்சத்தும், கலோரிகள் குறைவாகவும் இருப்பதால் உடல் எடையை குறைக்க உதவுகிறது.

லாக்டோஸ் சகிப்புத்தன்மை

பாதாம் பால் இயற்கையாகவே லாக்டோஸ் இல்லாதது. இது லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாதவர்களுக்கு ஒரு நல்ல மாற்றாக அமைகிறது.

தசை வலிமை

பாதாம் பால் வலுவான தசைகளை உருவாக்க உதவும். மேலும், பாதாம் பால் பார்வையை மேம்படுத்த உதவும்.

இரத்த அழுத்தம்

பாதாம் பால் சிறந்த இரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவும். பாதாம் பாலில் மெக்னீசியம் உள்ளது. இது இதய செயல்பாடு, இரத்த குளுக்கோஸ் மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கு முக்கியமானது.

சிறுநீரக செயல்பாடு

பாதாம் பால் சிறுநீரக செயல்பாட்டை சரியாக பராமரிக்க உதவும். மேலும் இது பாதாம் பால் எலும்புகளை வலுப்படுத்த உதவும்.