பாதாம் அல்வா சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!

By Devaki Jeganathan
14 Dec 2023, 15:22 IST

பாதாம் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது என நம்மில் பலருக்கு தெரியும். தினமும் ஒரு கைப்பிடி பாதாம் சாப்பிட்டால் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும். அதேபோல தான், பாதாம் அல்வா சாப்பிடுவதும் ஆரோக்கியத்திற்கு நல்லது. இதன் நன்மைகள் தொகுப்பில் பார்க்கலாம்.

சத்துக்கள் நிறைந்தது

பாதாம் அல்வாவில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின் ஈ, கால்சியம் மற்றும் துத்தநாகம் போன்ற சத்துக்கள் உள்ளதால், உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

பாதாம் அல்வா செய்ய

பாதாம் அல்வா செய்ய, 250 பாதாம், 12 ஸ்பூன் தேசி நெய் மற்றும் சர்க்கரை தேவைப்படும்.

பாதாம் அல்வா செய்முறை

பாதாமை தண்ணீரில் கொதிக்க வைக்கவும். பிறகு, பாதாமை தோலுரித்து அதை பேஸ்டாக தயார் செய்யவும். இப்போது ஒரு கடாயில் நெய் ஊற்றி சிறிது சூடாக்கி அதில் பாதாம் விழுதை சேர்க்கவும். குறைந்த தீயில் வைத்து, சுவைக்கு ஏற்ப சர்க்கரை சேர்க்கவும். பழுப்பு நிறமாக மாறியதும் அடுப்பை அணைக்கவும்.

எடை குறைய

பாதாம் அல்வா உடல் எடையை குறைக்க உதவும். பாதாமில் கலோரிகளின் அளவு மிகக் குறைவாக இருப்பதால், இது உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கும்.

சிறந்த செரிமானம்

பாதாம் அல்வா சாப்பிடுவது செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது. பாதாமில் நார்ச்சத்து மிக அதிகமாக உள்ளது, இது செரிமான அமைப்பை மேம்படுத்த உதவுகிறது.

சரும ஆரோக்கியம்

பாதாமில் உள்ள வைட்டமின் ஈ சருமத்திற்கும் கூந்தலுக்கும் மிகவும் நன்மை பயக்கும். பாதாம் பருப்பை உட்கொள்வதால் சருமம் பொலிவு பெறும்.

கொலஸ்ட்ராலை குறைக்கும்

பாதாமில் உள்ள நார்ச்சத்து மற்றும் புரதம் போன்ற சத்துக்கள் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவுகிறது. இதனை உண்பதால் உடலில் உள்ள நல்ல கொலஸ்ட்ரால் அளவு சீராக இருக்கும்.