குளிர்காலத்தில் அஸ்வகந்தா பொடி சாப்பிடுவது இவ்வளவு நல்லதா?

By Devaki Jeganathan
10 Jan 2024, 13:58 IST

அஸ்வகந்தா ஆயுர்வேத பண்புகள் நிறைந்தது. குளிர்காலத்தில் இந்த மூலிகையை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இந்த பொடி உங்கள் உடலுக்கு தேவையான சூடை வழங்கி வயிறு தொடர்பான பிரச்சனைகளில் இருந்து உங்களை பாதுகாக்கும்.

சத்துக்கள் நிறைந்தது

அஸ்வகந்தாவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட், கல்லீரல் டானிக், அழற்சி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பல சத்துக்கள் உள்ளன. இது உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும். அஸ்வகந்தாவில் மன அழுத்த எதிர்ப்பு பண்புகள் காணப்படுகின்றன, இது மன அழுத்தமின்றி இருக்க உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி

குளிர்காலத்தில் பருவகால நோய்கள் மற்றும் தொற்றுநோய்களின் ஆபத்து அதிகரிக்கிறது. இந்நிலையில், உங்கள் நோயெதிர்ப்பு அமைப்பு வலுவாக இருப்பது மிகவும் முக்கியம். உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அஸ்வகந்தாவை உட்கொள்ளலாம். இது இம்யூனோமோடூலேட்டரி விளைவைக் கொண்டுள்ளது, இது தேவைக்கேற்ப நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

வீக்கம் குறையும்

குளிர்காலத்தில் பலருக்கு கைகள் மற்றும் கால்களில் வீக்கம் ஏற்படும். உங்களுக்கும் இந்த பிரச்சனை இருந்தால் அஸ்வகந்தா பொடியை சாப்பிடலாம். இதனால் வீக்கத்தைக் குறைக்கலாம்.

கொலஸ்ட்ரால் குறையும்

அஸ்வகந்தாவை உட்கொள்வதால் கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடுகளின் அளவைக் குறைக்கலாம். மேலும், இது எச்டிஎல் அதாவது நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க உதவுகிறது.

வயிறு ஆரோக்கியம்

வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் ஏதேனும் இருந்தால் அஸ்வகந்தாவை உட்கொள்ளலாம். இது செரிமான அமைப்பை பலப்படுத்துகிறது மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. இதன் மூலம் பல வயிற்று பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

வலுவான எலும்புகள்

உங்கள் தசைகள் மற்றும் எலும்புகளை வலுப்படுத்த விரும்பினால், நீங்கள் அஸ்வகந்தா பொடியை உட்கொள்ளலாம். இந்தப் பொடியை பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் வலுப்பெறுவதோடு, உடல் வலிமையும் அதிகரிக்கும்.

தூக்கமின்மை

இரவில் தூங்காத பிரச்சனை இருந்தால், அஸ்வகந்தாவை சாப்பிடலாம். அஸ்வகந்தா பொடியை சாப்பிட்டால் தூக்கமின்மை பிரச்சனை தீரும். இது கவலை, மன அழுத்தம், மனச்சோர்வு போன்றவற்றிலிருந்து பாதுகாக்கும்.