தூக்கமின்மையால் அவதியா? இந்த உணவுகளை சாப்பிடுங்க.. தூக்கம் அப்படி வரும்

By Gowthami Subramani
18 Mar 2025, 15:01 IST

அன்றாட உணவில் மெலடோனின் நிறைந்த உணவுகளைச் சேர்ப்பது இயற்கையாகவே தூக்கத்தின் தரம் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் நல்ல மற்றும் சிறந்த ஓய்வுக்காக மாலை நேரத்தில் சில உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். இதில் நல்ல தூக்கத்திற்கு சாப்பிட வேண்டிய மெலடோனின் நிறைந்த உணவுகளைக் காணலாம்

வாழைப்பழங்கள்

வாழைப்பழங்களில் வைட்டமின் பி6 மற்றும் மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இவை உடல் மெலடோனினை உற்பத்தி செய்ய உதவுகிறது. எனவே, படுக்கைக்கு முன்பாக ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது தளர்வு மற்றும் சிறந்த தூக்கத்திற்கு வழிவகுக்கிறது

வால்நட்ஸ்

இதில் இயற்கையாகவே மெலடோனின் உள்ளது. மேலும் இது ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களால் நிறைந்ததாகும். வால்நட்ஸ் உட்கொள்வது தூக்க முறைகளை ஒழுங்குபடுத்தவும் மூளை ஆரோக்கியத்தை ஆதரிக்கவும் உதவுகிறது

தக்காளி

தக்காளி மெலடோனின் நிறைந்ததாகும். இதில் லைகோபீன் போன்ற ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளது. இவை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கவும், சிறந்த தூக்க தரத்தை மேம்படுத்தவும் உதவுகிறது

அன்னாசிப்பழம்

இது உடலில் மெலடோனின் அளவை அதிகரிக்கிறது. மேலும் இதில் செரோடோனின் உள்ளது. இது நல்ல மனநிலையை மேம்படுத்தவும், நிம்மதியான தூக்கத்திற்கும் வழிவகுக்கிறது

ஓட்ஸ்

மெலடோனின் நிறைந்த ஓட்ஸ் ஆனது சிக்கலான கார்போஹைட்ரேட்டுகளைத் தருகிறது. இது செரோடோனின் வெளியீட்டை ஊக்குவிக்கவும், மெலடோனினாக மாறி தூக்கத்தை ஊக்குவிக்கவும் உதவுகிறது

புளிப்பு செர்ரிகள்

மெலடோனின் நிறைந்த இயற்கை ஆதாரங்களில் ஒன்றாக புளிப்பு செர்ரி பழங்கள் அமைகிறது. படுக்கைக்கு முன்னதாக, புளிப்பு செர்ரி சாறு அல்லது புதிய செர்ரிகளை உட்கொள்வது தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துகிறது. மேலும் இது தூக்க-விழிப்பு சுழற்சியை ஒழுங்குபடுத்துகிறது