கொழுப்பு கல்லீரலால் அவதியா? உடனே சரிசெய்ய உதவும் எளிய வழிகள்

By Gowthami Subramani
21 Apr 2025, 17:35 IST

மது அருந்தாத கொழுப்பு கல்லீரல் நோய் பெரும்பாலும் பலரும் சந்திக்கக்கூடிய நோயாக மாறிவிட்டது. எனினும், உடற்பயிற்சி பழக்கங்கள், வாழ்க்கை முறை மற்றும் புத்திசாலித்தனமான உணவுமுறை மூலம் மாற்ற முடியும். இதில் கல்லீரல் ஆரோக்கியத்தை ஆதரிக்க உதவும் சில குறிப்புகளைக் காணலாம்

தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது

தினமும் 30-60 நிமிடங்கள் மிதமான உடல் செயல்பாடுகளை இலக்காகக் கொள்ள வேண்டும். இவை கொழுப்பை எரிக்கவும், கல்லீரலை மேம்படுத்தவும் உதவுகிறது. கல்லீரல் நொதிகளை அதிகரிக்க சைக்கிள் பயிற்சி, நடைபயிற்சி அல்லது வலிமை பயிற்சியை முயற்சிக்கலாம்

உப்பு மற்றும் சர்க்கரையைக் குறைப்பது

அதிகப்படியான சர்க்கரை, குறிப்பாக பிரக்டோஸ் மற்றும் உப்பு போன்றவை கல்லீரல் வீக்கம் மற்றும் கொழுப்பு குவிப்பை அதிகரிக்கிறது. எனவே செயற்கை பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகள் மற்றும் சர்க்கரை பானங்களை புறக்கணிப்பது அவசியமாகும்

கல்லீரலுக்கு ஏற்ற உணவை உட்கொள்வது

காய்கறிகள், மெலிந்த புரதம், முழு தானியங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும், கல்லீரலில் கொழுப்பு குவிவதை மோசமாக்கும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் சர்க்கரை உணவுகளை குறைக்கலாம்

மதுவை முற்றிலும் தவிர்ப்பது

சிறிய அளவில் கூட மது அருந்துவது கல்லீரலுக்கு அழுத்தம் கொடுக்கலாம். கொழுப்பு கல்லீரல் இருந்தால், சிரோசிஸ் போன்ற கடுமையான நிலைகளுக்கு முன்னேறுவதைத் தடுக்க மதுவைத் தவிர்ப்பது மிகவும் முக்கியமாகும்

மன அழுத்தத்தை நிர்வகிக்க

நாள்பட்ட மன அழுத்தத்தால் வீக்கம் அதிகரிப்பதுடன், வளர்ச்சிதை மாற்றத்தை மாற்றலாம். மனம் மற்றும் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க யோகா, ஆழ்ந்த சுவாசம் அல்லது தியானத்தை முயற்சிக்கலாம்

குறிப்பு

தினசரி இந்த நடவடிக்கைகளைக் கையாள்வதன் மூலம் கொழுப்பு கல்லீரலை மாற்றுவது சாத்தியமாகக் கருதப்படுகிறது. எனினும் சில உடல்நலப் பிரச்சனைகளைக் கொண்டிருப்பவர்கள், வாழ்க்கை முறை அல்லது உணவில் மாற்றங்களைச் செய்வதற்கு முன் எப்போது மருத்துவர் அல்லது உணவியல் நிபுணரை அணுகலாம்