புதினா இலைகளின் மருத்துவ குணங்கள் நம் உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது. புதினா இலைகளை உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம்.
புதினா இலைகளில் கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் ஏ, சி, டி, ஈ போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
புதினா இலைகள் இயற்கையாகவே அழற்சி எதிர்ப்பு தன்மை கொண்டவையாகும். இதை சாப்படிவது வயிற்றில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவும்.
சளி, இருமல் மற்றும் ஜலதோஷம் போன்றவைக்கு புதினா சிறந்த தேர்வாக இருக்கிறது. கோடையில் இந்த பிரச்சனையால் பலர் பாதிக்கப்படுகின்றனர்.
புதினா இலைகளில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள், முகப்பருவை நீக்குவதற்கு உதவுகிறது.
புதினாவில் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் நிறைந்து காணப்படுகிறது. இவை பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கவும், பற்களில் பிளேக் படிவுகளை சுத்தம் செய்யவும் உதவுகிறது.