வெயில் தாக்கத்தில் இருந்து மழை சற்று நிவாரணம் வழங்கினாலும், இன்னும் சில மாவட்டங்களில் வெயில் தாக்கம் இருக்கத்தான் செய்கிறது. வெயில் தாக்கத்தில் இருந்து விடுபட நம்மில் பலர் குளிர்ந்த நீரில் குளிப்போம். இல்லையெனில், குளிக்கும் தண்ணீரில் ஐஸ் சேர்த்து குளிப்ப்போம். இப்படி செய்வது நல்லதா என பார்க்கலாம்.
உடலுக்கு நன்மை பயக்கும்.
குளிக்கும் நீரில் சில பனிக்கட்டிகளை வைப்பது நன்மை பயக்கும். குளிப்பதன் மூலமோ அல்லது ஐஸ் தண்ணீரில் உட்கார்ந்து கொள்வதன் மூலமோ, உடல் தொடர்பான பல நன்மைகளைப் பெறலாம்.
ஆற்றல்
கோடை காலத்தில் ஐஸ் தண்ணீரில் குளித்தால் உடலுக்கு சக்தி கிடைக்கும். இதனால் உடல் சுறுசுறுப்பாக இருக்கும்.
பதற்றம் நீங்கும்
வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ ஏற்படும் டென்ஷனில் இருந்து விடுபட, ஐஸ் வாட்டரில் சிறிது நேரம் குளிக்கவும் செய்யலாம். இது மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.
எவ்வளவு ஐஸ் சேர்க்க வேண்டும்
கோடை காலத்தில் ஐஸ் தண்ணீரில் குளிக்க, ஒரு வாளி தண்ணீரில் 1-2 தட்டுகள் ஐஸ் சேர்க்கலாம். இந்த நீரில் குளித்தால் உடல் தளர்வடையும்.
எவ்வளவு நேரம் குளிக்க வேண்டும்
கோடையில் புத்துணர்ச்சியுடன் இருக்க, நீங்கள் 5-10 நிமிடங்கள் ஐஸ் தண்ணீரில் குளிக்கலாம். இது தசை வலியைக் குறைக்கவும் உதவுகிறது.
நல்ல தூக்கம்
உங்களுக்கு தூக்கமின்மை இருந்தால், ஐஸ் தண்ணீரில் குளிக்கலாம். இது இரவில் நிம்மதியாக தூங்க உதவுகிறது.
தோலுக்கு நல்லது
ஐஸ் தண்ணீரில் குளிப்பது உடலுக்கும் சருமத்திற்கும் நன்மை பயக்கும். இது சருமத்தை இறுக்கமாக்க உதவுகிறது.