கோடைக்காலம் துவங்கி வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. அடிக்கிற வெயிலுக்கு ஜில்லென்று ஏதாவது குடிக்கவும், குளிர்ந்த நீரில் குளிக்கவும் நம்மில் பலர் விரும்புவோம். வெயிலின் தாக்கத்தில் இருந்து விடு பட, பெரும்பாலான மக்கள் குளிர்ந்த நீரில் குளிக்க விரும்புவார்கள். கோடையில் குளிர்ந்த நீரில் குளிப்பது நல்லதா என பார்க்கலாம்.
மன அழுத்தத்தை போக்க
குளிர்காலம் தவிர, கோடை காலத்திலும் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் தசை பதற்றம் நீங்கும். உடல் நிதானமாக இருக்கும்.
குளிர்ந்த நீர் குளியல்
காலையில் குளிர்ந்த நீரில் குளிப்பது உடலுக்கு பல நன்மைகளை அளிக்கிறது. இது மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் நன்மை பயக்கும்.
ஆற்றல் கிடைக்கும்
குளிர்ந்த நீரில் குளித்தால் உடலுக்கு ஆற்றல் கிடைக்கும். இது ஆக்ஸிஜன் உட்கொள்ளல் மற்றும் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. உடலுக்கு ஆற்றலைத் தரும்.
இரத்த ஓட்டம் மேம்படும்
குளிர்ந்த நீரில் குளித்தால், ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, நோய்கள் விலகும்.
நோய் எதிர்ப்பு சக்தி
கோடைக்காலத்தில் குளிர்ந்த நீரில் குளித்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால் நாம் எளிதில் நோய்வாய்ப்படுவதில்லை.
உடல் ஓய்வு பெறுகிறது
குளிர்ந்த நீர் மன ஆரோக்கியத்திற்கு சிறந்ததாக கருதப்படுகிறது. குளிர்ந்த நீரால் உடலுக்கு மிகுந்த நிம்மதி கிடைக்கும்.
சருமத்திற்கு நல்லது
கோடையில் குளிர்ந்த நீரில் குளிப்பது சருமத்திற்கு நல்லது என்று கருதப்படுகிறது. மேலும் முடியில் பொடுகு வராது.