கீல்வாதம் போன்ற நாள்பட்ட வீக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அழற்சி எதிர்ப்பு உணவுகள
முழு தானியங்கள்
முழு தானிய வகைகளில் உள்ள வீக்கத்தைக் குறைக்கும் பண்புகள் தசைகள் மற்றும் எலும்புகளை உறுதியாக மற்றும் வலிமையாக வைத்துக் கொள்ள உதவுகிறது. இதன் மூலம் எலும்புகளில் ஏற்படும் வீக்கம், வலி போன்றவற்றைக் குறைக்க முடியும்
பழங்கள்
அன்னாசிப்பழம், ஆப்பிள், திராட்சை மற்றும் பெர்ரி போன்ற பழங்களில் அழற்சியைக் குறைக்க உதவும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளது. இவை வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன
அவகேடோ
வெண்ணெய் பழத்தில் உடலுக்கு நன்மை செய்யும் கரோட்டினாய்டுகள் மற்றும் டோகோபெரோல்கள் உள்ளது. டோகோபெரோல்கள் உடலில் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும் கரோட்டினாய்டுகள் ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது
பீட்ரூட்
பீட்ரூட்டில் வீக்கத்தை எதிர்க்கும் பண்புகள் நிறைந்துள்ளது. இதை பழச்சாறுகள், சாலட்கள், காய்கறி போன்றவற்றில் சேர்த்துக் கொள்ளலாம். இது சேதமடைந்த செல்களை சரி செய்யவும் உதவுகிறது
இஞ்சி மற்றும் மஞ்சள்
இஞ்சி மற்றும் மஞ்சள் இரண்டிலுமே அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது. இஞ்சி மற்றும் மஞ்சள் கலந்த தேநீர் அருந்துவது வீக்கம், அழற்சி போன்றவற்றைக் குறைக்க உதவுகிறது
பீன்ஸ்
பருப்பு, கருப்பு பீன்ஸ் மற்றும் பிற பருப்பு வகைகளில் நார்ச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளது. அவை வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. இதை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் மூட்டுவலி போன்ற நோய்களை சமாளிக்கலாம்
கொழுப்பு நிறைந்த மீன்
சால்மன், மத்தி போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது. இவை அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. இந்த மீன்களைத் தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் வீக்கம் மற்றும் கீல்வாதம் தொடர்புடைய மூட்டு வலியைக் குறைக்கலாம்