முதுமை நிலையை எதிர்த்துப் போராடுவதைக் காட்டிலும், அவற்றை துரிதப்படுத்த அல்லது குறைக்க சில வழிகள் உதவுகிறது. அதன் படி, முதுமை எதிர்ப்புக்கு உதவும் உணவுகள் சிலவற்றைக் காணலாம்
கீரை
கீரையில் வைட்டமின்கள் ஏ, சி, ஈ மற்றும் கே போன்றவை நிறைந்துள்ளன. இது தவிர, ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும் நிறைந்துள்ளன. எனவே கண் ஆரோக்கியம், ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் புற்றுநோய்க்கு எதிராக பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது
ப்ரோக்கோலி
இது ஊட்டச்சத்து மிக்க காய்கறிகளில் ஒன்றாகும். இதில் ஃபோலேட், கால்சியம், ஃபைபர், லுடீன், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வயதான எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் உள்ளது
மாதுளை
மாதுளை பழங்கள் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழங்களில் ஒன்றாகும். இதில் புனிகலஜின் என்ற ஒரு வகைபினோலிக் கலவை உள்ளது. இது சருமத்தில் கொலாஜனைத் தக்கவைத்து, வயதான அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது
அவகேடோ
அவகேடோவில் ஆரோக்கியமான கொழுப்புகள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது. மேலும் வைட்டமின் ஏ, சி, ஈ மற்றும் கே போன்றவையும் உள்ளது. இவை தோல் மற்றும் ஆரோக்கியத்தில் வயதான விளைவுகளை மாற்ற உதவுகிறது
அவுரிநெல்லிகள்
இது ஒரு பிரபலமான பழமாகும். இதில் வைட்டமின்கள் ஏ மற்றும் சி போன்றவை உள்ளது. இந்த அவுரிநெல்லிகள் வீக்கத்தைக் குறைப்பதன் மூலம் சூரிய ஒளியில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது
சிவப்பு குடைமிளகாய்
இந்த மிளகாய் வகை ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தவையாகும். இதில் உள்ள அதிகளவிலான வைட்டமின் சி சத்துக்கள் கொலாஜன் உற்பத்திக்கு பெரிதும் உதவுகிறது. மேலும் இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் நிறைந்துள்ளது
பப்பாளி
இதில் வைட்டமின்கள் ஏ, சி, பி, கே மற்றும் ஈ, பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும் உள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் சருமத்திற்கு வயதான விளைவுகளை ஏற்படுத்தும் ஃப்ரீ-ரேடிக்கல் சேதத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது
சர்க்கரைவள்ளிக்கிழங்கு
சர்க்கரைவள்ளிக்கிழங்கு ஆக்ஸிஜனேற்ற பீட்டா கரோட்டின் மூலம் ஆரஞ்சு நிறத்தைப் பெறுவதுடன், வைட்டமின் ஏ ஆக மாற்றப்படுகிறது. இது சருமத்தில் செல்களை உற்பத்தி செய்து நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்தி, இளமைத் தோற்றத்தை அளிக்கிறது