வல்லாரை கீரையில் பலவிதமான மருத்துவகுணங்கள் நிறைந்துள்ளன. அப்படி என்ன இதில் இருக்கிறது என்று இங்கே விரிவாக காண்போம்.
மூளைக்கு நல்லது
வல்லாரை கீரையில் உள்ள ஊட்டச்சத்துகள் மூளையின் நரம்புகளை தூண்டி நினைவாற்றலை மேம்படுத்த உதவுகிறது.
பற் கறைகள் நீங்கும்
பற்கள் கறையாக இருந்தால், வல்லாரை கீரையை பொடி செய்து பயன்படுத்தவும். இதனை தினமும் காலை, இரவு இரண்டு வேலையும் பற்களில் தேய்த்து வரவும். இவ்வாறு செய்தால் கரை காணாமல் போகும்.
கண்ணுக்கு நல்லது
பார்வைத் திறன் குறைவாக இருந்தால், தினமும் உணவில் வல்லாரை கீரை சேர்த்து வரவும். இது பார்வைகுறைபாடு பிரச்னையை தீர்க்கும்.
குடல் புண் ஆறும்
குடல் புண்ணுக்கு வல்லாரை கீரை அருமருந்தாக திகழ்கிறது. இதற்கு வல்லாரை கீரையை வெறும் வயிற்றில் மென்று சாப்பிட வேண்டும்.
இரத்த சோகை தீடும்
வல்லாரை கீரையில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இது உங்கள் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, இரத்த சோகையை நீக்குகிறது.