செரிமானம் மேம்படும்
சுண்டைக்காயில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது குடல் இயக்கத்தை சீராக்கி, செரிமானத்தை மேம்படுத்துகிறது.
இரத்த சோகை நீங்கும்
சுண்டைக்காயில் இரும்புச்சத்து உள்ளது. இது இரத்த எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது. இதனால் இரத்த சோகை நீங்கும்.
நீரிழிவு மேலாண்மை
சுண்டைக்காய் உடலில் இன்சுலின் உற்பத்தி மற்றும் குளுக்கோஸ் உறிஞ்சுதலைக் கட்டுப்படுத்துகிறது. மேலும் இது இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
மாதவிடாய் சீராகும்
சுண்டைக்காயில் சபோஜெனின் என்ற தனித்துவமான ஸ்டீராய்டு உள்ளது. இது ஹார்மோன் சுரப்பைக் கட்டுப்படுத்தும் மற்றும் உடலில் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்தும். இதனால் மாதவிடாய் சீராகும்.
இதய ஆரோக்கியம் மேம்படும்
சுண்டைக்காயில் உள்ள அதிக புரத உள்ளடக்கம், அத்தியாவசிய அமினோ அமிலங்கள், இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.