கொத்தமல்லி விதைகளை நீரில் கொதிக்க வைத்து பருகினால் சில பிரச்னைகள் நீங்கும். அப்படி என்ன நன்மைகள் இதில் இருக்கிறது? எந்த நோய்கள் குணமாகும்? என்று இங்கே காண்போம்.
எதிர்ப்பு சக்தி
எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கொத்தமல்லி விதைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்கவும். இது வைரஸ் தொற்றுகளில் இருந்து உங்களை காக்க உதவும்.
செரிமானம் மேம்படும்
செரிமான கோளாறு உள்ளவர்கள் கொத்தமல்லி விதை கொதிக்க வைத்த நீரை குடிக்கவும். இது குடல் இயக்கத்தை மேம்படுத்தி, செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது.
நீரிழிவு மேலாண்மை
தினமும் காலை வெறும் வயிற்றில் கொத்தமல்லி விதை கொதிக்க வைத்த நீரை குடிக்கவும். இது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும்.
முடி ஆரோக்கியம்
கொத்தமல்லி விதைகளில் வைட்டமின் கே, சி மற்றும் ஏ உள்ளன. இது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. மேலும் முடி உதிர்வை தடுக்கிறது.
அழர்ஜி எதிர்ப்பு பண்புகள்
உடலில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலிகளில் இருந்து உடனடி நிவாரணம் பெற கொத்தமல்லி விதை நீர் உதவும். அதற்கு இதில் உள்ள அழர்ஜி எதிர்ப்பு பண்புகளே காரணம்.