கண்கள் முதல் இதயம் வரை... கருப்பு திராட்சையில் உள்ள நன்மைகள்!

By Kanimozhi Pannerselvam
01 Feb 2024, 20:39 IST

ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்தது

கருப்பு திராட்சை ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது.இது ஃப்ரீ ரேடிக்கல்களிடமிருந்து செல் சேதத்தை பாதுகாக்க உதவுகிறது.

இதய ஆரோக்கியம்

கருப்பு திராட்சை தமனிகளில் பிளாக் ஏற்படுவதை தடுப்பதோடு, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

மினரல்ஸ்

கருப்பு திராட்சையில் தாதுக்கள் நிறைந்துள்ளதால், அது எலும்பு அடர்த்தியை அதிகரிக்கிறது.

மூளை ஆரோக்கியம்

கருப்பு திராட்சையில் உள்ள ரெஸ்வெராட்ரோல் உள்ளது, இது மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துவதாக கூறப்படுகிறது.

சர்க்கரை நோய்

கருப்பு திராட்சையில் உள்ள ரெஸ்வெராட்ரோல் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்த உதவுகிறது. இருப்பினும் சர்க்கரை நோயாளிகள் இதனை அளவோடு உட்கொள்ள வேண்டும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

கண்களுக்கு நல்லது

இதிலுள்ள லுடீன், ஜியாக்சாண்டின் போன்ற கலவைகள் உள்ளன, அவை நல்ல பார்வையை பராமரிக்க உதவும்.

முடி மற்றும் தோல் ஆரோக்கியம்

கருப்பு திராட்சையில் அடங்கியுள்ள ஆக்ஸினேற்ற பண்புகள் செல் சேதத்தை தடுத்து சருமம் இயற்கையாக பிரகாசிக்கவும், முடி வளர்ச்சியை அதிகரிக்கவும் உதவுகிறது.