முளைக்கட்டிய வெந்தயம் சாப்பிட்டால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் தெரியுமா?
By Kanimozhi Pannerselvam
04 Feb 2024, 10:23 IST
செரிமான பிரச்சனை
வெந்தயத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது அஜீரணம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை நீக்குகிறது. உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால் முளைக்கட்டிய வெந்தய விதைகளை சாப்பிடுவதன் மூலம் நிவாரணம் பெறலாம்.
இதய ஆரோக்கியம்
வெந்தயத்தை மூளைக்கட்டி சாப்பிடுவது இதயத்திற்கு மிகவும் நல்லது. முளைத்த வெந்தயம் உடலில் கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்கிறது. இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதயம் தொடர்பான நோய்களின் அபாயத்தைக் குறைக்கின்றன.
வெந்தயம் உடலின் நச்சுத்தன்மையை நீக்குகிறது. முளைக்கட்டிய வெந்தயத்தில் உள்ள சத்துக்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து உடல் எடையை குறைக்க உதவுகிறது. மேலும் உடலில் தேங்கியுள்ள தேவையற்ற கொழுப்புகளையும் குறைக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தி
மூளைக்கட்டிய வெந்தயத்தை சாப்பிடுவதால் சளி, காய்ச்சல் போன்ற பருவகால நோய்கள் வராமல் தடுக்கிறது. வெந்தயம் வெப்பத்தைத் தூண்டும் ஒரு விதை, எனவே வெந்தயத்தை குளிர்காலத்தில் உட்கொள்வதால் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.
கூந்தலுக்கு நல்லது
வெந்தயம் முடியின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. முளைக்கட்டிய வெந்தயத்தை சாப்பிட்டு வந்தால், முடி உதிர்வது குறையும். வெந்தயத்தில் உள்ள புரதம் கூந்தலுக்கு வலு சேர்க்கிறது. அதுமட்டுமின்றி இதில் உள்ள நிகோடினிக் அமிலம் முடிக்கு நல்லது.
சர்க்கரை நோய்
சர்க்கரை நோயாளிகள் முளைக்கட்டிய வெந்தயத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தலாம் என்கின்றனர் நிபுணர்கள். மேலும், வெந்தயம் மெதுவாக குளுக்கோஸை இரத்த ஓட்டத்தில் வெளியிடுகிறது. இதனால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு திடீரென உயருவதும் கட்டுப்படுத்தப்படுகிறது.