எக்காரணம் கொண்டும் இனி ஆம்லா விதையை தூக்கிப் போடாதீங்க!

By Karthick M
09 May 2025, 19:42 IST

நெல்லிக்காய் சாப்பிட்ட உடன் அதன் விதையை தூக்கிப்போடும் பழக்கம் பலரிம் இருக்கிறது. இதன் நன்மைகளை அறிந்தால் இனி இதை தூக்கிப்போட மாட்டீர்கள்.

ஆம்லா விதைகளில் பாலிபினால்கள், அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் மற்றும் தாதுக்கள் போன்றவை நிறைந்துள்ளது.

நெல்லிக்காய் விதையை உணவில் சேர்ப்பது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

ஆம்லா விதைகள் அதிக நார்ச்சத்துக்கள் நிறைந்ததாகும். இவை செரிமானத்தை மேம்படுத்தி, மலச்சிக்கல்லைத் தடுக்க உதவுகிறது.

நெல்லிக்காய் விதைகளில் உள்ள அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது.