கோதுமைக்கு பதிலா இந்த 6 மாவை பயன்படுத்துங்க... ஆரோக்கியம் சும்மா அள்ளும்!
By Kanimozhi Pannerselvam
11 Jan 2024, 12:05 IST
பாதாம் மாவு
பாதாம் பருப்பை நன்றாக அரைத்து, எளிய முறையில் வீட்டிலேயே பசையம் இல்லாத இந்த மாவை தயாரிக்க முடியும். இந்த வகை மாவில் மெக்னீசியம், தாமிரம், இரும்பு, கால்சியம், பொட்டாசியம் மற்றும் மாங்கனீஸ் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் கார்போஹைட்ரேட் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும், புரதச்சத்து அதிகமாகவும் உள்ளது.
தேங்காய் மாவு
மற்ற மாவைக் காட்டிலும் இதில் அதிக கொழுப்புச் சத்து மற்றும் அதிக நார்ச்சத்து உள்ளது. அப்பம் மஃபின்கள், பிளாட்பிரெட்கள், பிஸ்கட்கள் மற்றும் ரொட்டிகள் போன்ற பல்வேறு சமையல் வகைகளுக்கு ஏற்ற பசையம் இல்லாத மாவாகும்.
உலர்த்தப்பட்ட மரவள்ளி கிழங்கில் இருந்து தயாரிக்கப்படும் பசையம் இல்லாத மாவான இது, பேக்கிங் வகைகள், சூப் மற்றும் கிரேவிகளில் பயன்படுத்த சிறந்தது.
கொண்டைக்கடலை மாவு
உலர்ந்த கொண்டைக்கடலையில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இது புரதம், நார்ச்சத்து மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களில் மிகவும் நிறைந்துள்ளது டார்ட்டிலாக்கள், க்ரீப்ஸ் மற்றும் பிளாட்பிரெட்ஸ் செய்ய பயன்படுத்தப்படலாம்.
ஓட்ஸ் மாவு
இதில் பீட்டா-குளுக்கன் எனப்படும் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது, இது பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. நார்ச்சத்து, புரதம் மற்றும் ஊட்டச்சத்து அதிகம் உள்ள ஓட்ஸ் மாவு குக்கீகள், ரொட்டிகள் தயாரிக்க பயன்படுத்தலாம்.
ஓட்ஸ் மாவு
இதில் பீட்டா-குளுக்கன் எனப்படும் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது, இது பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. நார்ச்சத்து, புரதம் மற்றும் ஊட்டச்சத்து அதிகம் உள்ள ஓட்ஸ் மாவு குக்கீகள், ரொட்டிகள் தயாரிக்க பயன்படுத்தலாம்.