அனைவரும் சர்க்கரை கலந்த தேநீர் அருந்துவார்கள். சிலர் இஞ்சியுடன், சிலர் தேனுடன், சிலர் பனை வெல்லத்துடன் குடிப்பார்கள். இவை ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கருதப்படுகிறது.
டீயில் சர்க்கரைக்குப் பதிலாக உப்பு சேர்த்தால் சுவை நன்றாக இருப்பதோடு, உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. இதிலுள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் தொண்டை வலியைக் குணப்படுத்த உதவுகின்றன.
உப்பில் உள்ள சோடியம் சளியை மெல்லியதாக மாற்ற உதவுகிறது. இது இருமலைப் போக்கும்.
இதில் உள்ள எலக்ட்ரோலைட்டுகள் உடலுக்கு ஆற்றலை அளித்து சோர்வை தடுக்கிறது.
உப்பு சேர்த்து டீ குடிப்பது உங்கள் செரிமானத்தை பலப்படுத்துவதோடு, இரைப்பை பிரச்சனைகளையும் குறைக்கும். நீங்கள் அடிக்கடி காய்ச்சல் அல்லது சளியால் அவதிப்பட்டால், இந்த உப்பு டீ உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.