கோடை காலத்தில் இளநீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!
By Kanimozhi Pannerselvam
14 Mar 2024, 09:37 IST
ரத்த அழுத்தம்
இளநீரில் உள்ள வைட்டமின் சி, பொட்டாசியம், மக்னீசியம் ஆகியவை ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகின்றன.
நீரேற்றத்தின் ஆதாரம்
கோடை கால வெப்பம் காரணமாக உடல் அதிக அளவிலான நீர்ச்சத்துக்களை இழக்கும். இதனை ஈடு செய்வதற்காக தண்ணீரை பருகுவதை விட இளநீர் குடிப்பது நீரேற்றம் மற்றும் எலக்ட்ரோலைட் இழப்பை சரி செய்ய உதவும்.
இளநீரில் வைட்டமின்-சி, அமினோ அமிலங்கள், நார்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் இருப்பதினால் நமது வயிற்றுப்போக்கு பிரச்சனை அனைத்தையும் குணப்படுத்த உதவுகிறது.
கோடை நோய்கள்
கோடைக்கால நோய்களான வயிற்றுக்கடுப்பு, நீர்க் கடுப்பு, மஞ்சள் காமாலை, அம்மை நோய், தோல் சம்பந்தமான நோய்கள் மற்றும் பல்வேறு நோய்களை கட்டுப்படுத்தக்கூடியது.
எனர்ஜி ட்ரிங்க்
உடலில் நல்ல கொழுப்பை (எச்.டி.எல்) அதிகரிக்கும். இதனால் உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்களுக்கு ஏற்றது. உடற்பயிற்சி செய்தபின் உற்சாக பானங்களுக்கு பதிலாக இளநீர் பருகுவது நல்ல பலனைக் கொடுக்கும்.