குளிர் கால வரப்பிரசாதம்... காபியில் ஒரு ஸ்பூன் நெய் கலந்து பாருங்கள்!
By Kanimozhi Pannerselvam
08 Jan 2024, 15:49 IST
உடல் சூட்டை அதிகரிக்கும்
நெய் உடலுக்கு இயற்கையான சூட்டை அளிக்கக்கூடிய. குளிர் காலத்தில் வெதுவெதுப்பான உணர்வை அனுபவிக்க விரும்பினால், சூடான காபியில் ஒரு ஸ்பூன் நெய் கலந்து குடிக்கலாம்.
வெயிட் லாஸ்
நெய் காபி குடிப்பது பசியை கட்டுப்படுத்துகிறது. மேலும் நெய்யில் பூஜ்ஜிய கார்போஹைட்ரேட்டுகள், ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 போன்ற கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. அவை எடை இழப்பிற்கு உதவுகிறது.
நெய்யில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் இருப்பதால், அது நரம்பு திசு வளர்ச்சிக்கும், செயல்பாட்டிற்கும் பெரிதும் உதவுகிறது. இது மனநிலையை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.
அமிலத்தன்மை
காபியில் சிறிதளவு நெய் சேர்ப்பது அமிலத்தன்மை மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. ஏனெனில் நெய்யில் பியூட்ரிக் அமிலம் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன.
ஆற்றல் சுரங்கம்
காபியில் உள்ள காஃபின் உடன் நெய்யில் உள்ள கொழுப்பு அமிலங்களின் சத்தும் சேரும் போது, அது உடலுக்கு அதிக ஆற்றலையும், சுறுசுறுப்பையும் தருகிறது.