மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமான உணவுமுறை காரணமாக பலரும் கொழுப்பு கல்லீரல் பிரச்சனையைச் சந்திக்கின்றனர். இதில் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க சாப்பிட வேண்டிய 5 உணவுகளைக் காணலாம்
கிரீன் டீ
கிரீன் டீயில் கேட்டசின்கள் நிறைந்துள்ளன. இது கல்லீரலின் நொதி செயல்பாட்டை மேம்படுத்தவும், கொழுப்பு குவியும் செயல்முறையைக் குறைக்கவும் உதவுகிறது. சிறந்த முடிவுகளைப் பெற, தினமும் 2 முதல் 3 கப் கிரீன் டீ குடிக்கலாம்
வெண்ணெய்ப்பழம்
இதில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு மற்றும் குளுதாதயோன் உள்ளது. இது கல்லீரலைப் பாதுகாக்கவும், கொழுப்பு வளர்சிதை மாற்றத்திற்கும் உதவுகிறது. வாரத்திற்கு 2 முதல் 3 முறை வெண்ணெய்ப்பழம் சாப்பிடலாம்
கொழுப்பு நிறைந்த மீன்
மத்தி, சால்மன் மற்றும் கானாங்கெளுத்தி போன்ற மீன்களில் ஒமேகா-3 உள்ளது. இவை வீக்கத்தைக் குறைக்கவும், கல்லீரல் கொழுப்பைக் குறைக்கவும், லிப்பிட் அளவை மேம்படுத்தவும் உதவுகிறது. எனவே வாரத்திற்கு இரு முறையாவது கொழுப்பு நிறைந்த மீன்களை சாப்பிட வேண்டும்
பூண்டு
இது கல்லீரல் நொதிகளின் செயல்பாட்டை அதிகரிக்கிறது. இவை கொழுப்பை எரிக்க உதவுகிறது. இதில் உள்ள செலினியம் உடலை நச்சு நீக்க உதவுகிறது. எனவே தொடர்ந்து சமையலில் புதிய பூண்டைப் பயன்படுத்தலாம்
பச்சை இலை காய்கறிகள்
பச்சை இலை காய்கறிகளில் ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன. மேலும் இதில் மிகக் குறைவான கலோரிகள் உள்ளது. இவை கல்லீரலில் கொழுப்பு மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. இதை சூப்கள் அல்லது சாலட்களில் சேர்ப்பதன் மூலம் நன்மை பெறலாம்