முடி வளர்ச்சியைத் தடுக்கும் இந்த பழக்கங்களை உடனே நிறுத்துங்க

By Gowthami Subramani
04 Jun 2025, 21:21 IST

நீளமான மற்றும் அடர்த்தியான முடியைப் பெற விரும்புபவர்கள் சில ஆரோக்கியமற்ற பழக்க வழக்கங்களைத் தவிர்க்க வேண்டும். இதில் முடி வளர்ச்சியைத் தாமதப்படுத்தக்கூடிய பழக்க வழக்கங்கள் சிலவற்றைக் காணலாம்

அடிக்கடி முடியைக் கழுவுதல்

முடியை அதிகமாகக் கழுவுவதால், உச்சந்தலையில் உள்ள இயற்கை எண்ணெய்கள் நீக்கப்படுகிறது. இதனால் உச்சந்தலை வறண்டு முடி உடையத் தொடங்குவதுடன், முடி வளர்ச்சியையும் பாதிக்கிறது

மோசமான உணவு மற்றும் நீரேற்றம்

இரும்புச்சத்து, புரதம் மற்றும் அத்தியாவசிய வைட்டமின்கள் போன்றவை இல்லாததால் முடியின் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். மிகக் குறைந்த அளவு தண்ணீர் குடிப்பதும் முடியை பலவீனப்படுத்தக்கூடும்

ஈரமான முடியை சீவுவது

ஈரமான முடி மிகவும் உடையக்கூடியத் தன்மை கொண்டதாகும். இந்நிலையில், இதை தீவிரமாக சீவுதல் முடி உடைதலுக்கு வழிவகுக்கிறது. குறிப்பாக வேர்களைச் சுற்றி முடி வளர்ச்சி சுழற்சியை பாதிக்கலாம்

தலைமுடியை இறுக்கமாகக் கட்டுவது

இறுக்கமான போனிடெயில்கள் முடியின் வேர்களை வலுவிழக்கச் செய்கிறது. இதனால் முடி உதிர்தல் மற்றும் உச்சந்தலையில் அழுத்தம் போன்றவை ஏற்படும். இது இயற்கையான முடி வளர்ச்சியைத் தடுக்கிறது

ஹீட் ஸ்டைலிங் கருவி பயன்பாடு

கர்லிங் இரும்பு மற்றும் ஸ்ட்ரைட்டனர் போன்றவை தலைமுடியை உடனடியாக ஸ்டைல் செய்கிறது. ஆனால், இதன் நிலையான வெப்பம் முடியை பலவீனப்படுத்துவதுடன், முடி உடைதல் ஏற்பட்டு, அதன் வளர்ச்சியைக் குறைக்கிறது

உச்சந்தலை ஆரோக்கியம்

தலையில் பொடுகு, உரிதல் அல்லது அரிப்பு இருப்பது அல்லது அதிகப்படியான ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்துவதால் முடியின் வேர்களுக்கு ஆரோக்கியமற்ற சூழல் உருவாகிறது. இது முடி வளர்ச்சியைப் பாதிக்கலாம்