நீங்க செய்யும் இந்த பழக்கங்கள் உங்க முடி வளர்ச்சியை மெதுவாக்கலாம்

By Gowthami Subramani
09 Apr 2025, 17:05 IST

நீண்ட, ஆரோக்கியமான கூந்தலைப் பெறுவது பலருக்கும் கனவாகவே உள்ளது. ஆனால், இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அன்றாட வாழ்வில் நாம் செய்யும் சில பழக்க வழக்கங்கள் கூந்தல் வளர்ச்சியைப் பாதிக்கக்கூடும். இதில் முடி வளர்ச்சியைத் தாமதமாக்கும் சில பழக்கங்களைக் காணலாம்

முடியை அடிக்கடி கழுவுவது

தலைமுடியை அதிகப்படியாகக் கழுவுவதால் இயற்கை எண்ணெய்கள் அகற்றப்பட்டு, உச்சந்தலையை உலர வைக்கிறது. மேலும், தலைமுடி உடையக்கூடியதாக இருக்கலாம். இது முடியின் நீளத்தைத் தக்கவைப்பதைப் பாதிக்கிறது

ஈரமான முடியை கடுமையாக சீவுவது

ஈரமான முடி உடையக்கூடியதாகும். குறிப்பாக, வேர்களுக்கு அருகில் முடி உடைப்புக்கு வழிவகுக்கலாம். இது முடி வளர்ச்சி சுழற்சியை பாதிக்கும் நிலை ஏற்படலாம்

வெப்ப ஸ்டைலிங் கருவிகளை பயன்படுத்துவது

தலைமுடிக்கு விரைவான ஸ்டைலை வழங்கக்கூடிய கருவிகளைப் பயன்படுத்துவதால், அதன் வெப்பம் முடி இழைகளை பலவீனப்படுத்தி, உடைப்பை ஏற்படுத்துவதன் மூலம் வளர்ச்சியைக் குறைக்கிறது

எண்ணெய் தடவுவதைத் தவிர்ப்பது

உச்சந்தலை ஆரோக்கியத்திற்கு ஊட்டச்சத்துக்கள் தேவை. இந்நிலையில், எண்ணெய் தடவுவதைப் புறக்கணிப்பது அல்லது ஈரப்பதமாக்கும் வழக்கத்தைத் தவிர்ப்பது ஊட்டச்சத்துக்களைத் தவிர்ப்பதுடன், உச்சந்தலை வறண்டு, பலவீனமான வேர்கள் மற்றும் மோசமான முடி வளர்ச்சிக்கு வழிவகுக்கலாம்

ஆரோக்கியமான உணவைப் புறக்கணிப்பது

தலைமுடி உள் ஆரோக்கியத்தைப் பிரதிபலிக்கக்கூடியதாகும். சமச்சீரான உணவைத் தவிர்ப்பது அல்லது குப்பை உணவை நம்பியிருப்பது உச்சந்தலையின் வளர்ச்சிக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை இழக்கச் செய்கிறது

கடுமையான இரசாயன சிகிச்சைகள்

முடிக்கு கடுமையான இரசாயன சிகிச்சை முறைகளைக் கையாள்வது முடி அமைப்பை பலவீனப்படுத்தலாம். இது காலப்போக்கில் உடைந்து, முடி வளர்ச்சி குறைவதற்கு வழிவகுக்கிறது

முடியை மிகவும் இறுக்கமாகக் கட்டுவது

இறுக்கமான போனிடெயில்கள் முடியின் வேர்களை இழுக்கிறது. இதனால், முடி உதிர்தல் மற்றும் உச்சந்தலையில் பதற்றம் போன்றவற்றை ஏற்படுத்தலாம். இது இயற்கையான வளர்ச்சியை சீர்குலைக்கிறது