வெயிலில் வியர்வை சூடு உள்ளிட்ட காரணங்களால் முடிகள் பெருமளவு பாதிக்கப்படுகிறது. வெங்காய சாறு தடவுவது ஏன் முக்கியம் என்பதை பார்க்கலாம்.
முடியின் ஆரோக்கியத்துக்கு முக்கிய அங்கமாக விளங்குவது கெரட்டின் ஆகும். கெரட்டின் வெங்காய சாற்றில் அதிகமாக உள்ளது.
வெங்காயத்தில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் அதிகம், தலைமுடியின் உச்சந்தலையில் உள்ள தொற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுகிறது.
ஃபிளாவனாய்டுகள் போன்ற ஆக்ஸிஜனேற்றங்களும் அதிகம், இவை முடியின் மயிர்க்கால்களை ஃப்ரீ ரேடிக்கல் சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது.
இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும், எரிச்சல் உணர்வை தடுக்கும், பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள், கொலாஜன் உற்பத்தி வெங்காய சாற்றில் அதிகம்.