முடி ஆரோக்கியத்தை மேம்படுத்த, முடி வளர்ச்சியைத் தூண்ட சில ஆரோக்கியமான வைட்டமின்கள் தேவைப்படுகிறது. இதில் முடி வளர்ச்சியை ஆதரிக்க உதவும் வைட்டமின்களைக் காணலாம்
வைட்டமின் ஏ
உயிரணு வளர்ச்சிக்கு வைட்டமின் ஏ மிகவும் இன்றியமையாததாகும். இது சருமத்தின் உற்பத்தியை ஆதரிக்கவும், முடியை ஈரப்பதமாக்கவும் உதவுகிறது. மேலும் ஆரோக்கியமான உச்சந்தலையை ஊக்குவிக்கிறது
நியாசின் (வைட்டமின் பி3)
நியாசின் உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், மயிர்க்கால்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. இவை முடி உதிர்வைத் தடுக்க மற்றும் வளர்ச்சியை ஊக்குவிக்க உதவுகிறது
பயோட்டின் (வைட்டமின் பி7)
இது கெரட்டின் உற்பத்திக்கு அவசியமாகும். மேலும் முடியை வலுப்படுத்தவும், வளர்ச்சியை மேம்படுத்தவும் உதவுகிறது. இது முடி ஆரோக்கியத்திற்கான மிகவும் பிரபலமான சப்ளிமெண்ட்களில் ஒன்றாகும்
ஃபோலிக் அமிலம் (வைட்டமின் B9)
இவை இரத்த சிவப்பணுக்களை உருவாக்க உதவுகிறது. மேலும் ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை மயிர்க்கால்களுக்கு வழங்குகிறது. இதன் மூலம் ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது
வைட்டமின் டி
இவை முடி வளர்ச்சி சுழற்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. குறைந்த வைட்டமின் டி காரணமாக முடி உதிர்வு ஏற்படலாம். இது ஆரோக்கியமான முடியை பராமரிக்க கூடுதல் நன்மை பயக்கும்
வைட்டமின் ஈ
இது அதன் ஆக்ஸிஜனேற்ற பண்புகளுக்காக நன்கு அறியப்படுகிறது. வைட்டமின் ஈ ஊட்டச்சத்துக்கள் உச்சந்தலையில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. இது ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது