இந்த வைட்டமின் குறைபாடு இருந்தா முடி உதிர்வு கட்டாயம் ஏற்படும்

By Gowthami Subramani
20 Oct 2024, 22:14 IST

முடி உதிர்வு ஏற்பட பல்வேறு காரணங்கள் உண்டு. இதில் முடி உதிர்வு எந்த வைட்டமின் குறைபாட்டால் ஏற்படுகிறது என்பதைக் காண்போம்

வைட்டமின் A குறைபாடு

அதிகப்படியான வைட்டமின் மற்றும் வைட்டமின் ஏ குறைபாடு போன்ற இரண்டுமே முடி உதிர்வுக்கு வழிவகுக்கலாம். போதுமான வைட்டமின் ஏ உச்சந்தலையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது

வைட்டமின் B7 குறைபாடு

பயோட்டின் குறைபாடு வைட்டமின் பி7 குறைபாடு எனப்படுகிறது. இது முடி உதிர்தல், உடையக்கூடிய முடி மற்றும் முடி மெலிந்து போவது போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. ஏனெனில் இந்த வைட்டமின் முடி வலிமை மற்றும் வளர்ச்சிக்கு அவசியமாகும்

வைட்டமின் B12 குறைபாடு

வைட்டமின் B12 குறைபாடு காரணமாக முடி உதிர்தல் உண்டாகலாம். ஏனெனில் இது மயிர்க்கால்களுக்கு ஆக்ஸிஜனை வழங்குவதோடு முடி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

வைட்டமின் சி குறைபாடு

இந்த வைட்டமின் குறைபாடு முடி தண்டுகளை வலுவிழக்கச் செய்யலாம். கொலாஜன் உற்பத்தியில் வைட்டமின் சி இருப்பதால், இதன் குறைபாடு காரணமாக முடி உடைதல் மற்றும் மெதுவாக முடி வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது

வைட்டமின் டி

வைட்டமின் டி இன் குறைபாடு காரணமாக அலோபீசியா மற்றும் முடி உதிர்தலுக்கு வழிவகுக்கலாம். ஏனெனில் இது மயிர்க்கால்களைத் தூண்டுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது

இந்த வைட்டமின் குறைபாடுகளை போதுமான அளவில் பராமரிப்பதன் மூலம் ஆரோக்கியமான முடி வள