நரைத்த முடியை தடுக்க உதவும் சத்து வகைகள் இதோ!

By Karthick M
28 Feb 2024, 15:33 IST

நரை முடி பிரச்சனை

உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களால் பலரின் தலைமுடி முன்கூட்டியே நரைத்துவிடும். நரை முடி பிரச்சனையில் இருந்து விடுபட உதவும் ஊட்டச்சத்து வகைகளை பார்க்கலாம்.

புரதம் நிறைந்த உணவு

முடி நரைப்பதை தடுக்கவும் முடி ஆரோக்கியமாக இருக்கவும் புரதச்சத்து மிக முக்கியம். இதற்கு புரதம் நிறைந்த முட்டை, உலர் பழங்கள் மற்றும் பால் பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

வைட்டமின் பி12 முக்கியம்

முடி நரைப்பதை தடுக்க வைட்டமின் பி12 உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதற்கு சோயா மற்றும் தானியங்களை உட்கொள்ளலாம்.

ஃபோலிக் அமிலம்

முடி ஆரோக்கியமாகவும் நரைப்பதை தடுக்கவும் ஃபோலிக் அமிலம் நிறைந்த உணவை சாப்பிடுங்கள். பச்சை காய்கறிகள் மற்றும் உலர் பழங்களில் இது அதிகம் உள்ளது.

வைட்டமின் ஈ, வைட்டமின் டி

வைட்டமின் ஈ, வைட்டமின் டி மிக முக்கியம். ஆலிவ் எண்ணெய், பாதாம்,வால்நட்டில் வைட்டமின் ஈ உள்ளது. அதேபோல் காலையில் 10 நிமிடங்கள் சூரிய ஒளியில் உட்காரவும் இது வைட்டமின் டி பெற உதவும்.

முழுமையாக படித்ததற்கு நன்றி

முடி நரைப்பதை தடுக்க இதுபோன்ற பல வழிகள் உதவும். இருப்பினும் தீவிரத்தை உணர்ந்து மருத்துவரை அணுகுவது நல்லது.