முடி வளர இந்த விதைகளை உணவில் சேர்த்துக்கொள்ளவும்

By Ishvarya Gurumurthy G
17 Nov 2024, 17:46 IST

விதைகளை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கும் சருமத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். முடி வளர்சிக்கும் இது முக்கிய பங்கு வகிக்கிறது. முடி வளர உதவும் விதைகள் இங்கே.

விதைகளை சாப்பிடுவது ஏன் முடிக்கு நன்மை பயக்கும்?

விதைகள் முடிக்கு நன்மை பயக்கும். தாமிரம், துத்தநாகம் மற்றும் புரதம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அவற்றில் காணப்படுகின்றன. இவை முடி உதிர்வை குறைத்து புதிய முடி வளர உதவும். முடி நீளத்தை அதிகரிக்க நீங்கள் எந்த விதைகளை உட்கொள்ளலாம் என்பதை இங்கே காண்போம்.

ஆளி விதைகள்

உங்கள் முடியை வலுப்படுத்த நீங்கள் ஆளி விதைகளை உட்கொள்ளலாம். நல்ல அளவு புரதம், நார்ச்சத்து, மெக்னீசியம், கால்சியம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை ஆளிவிதையில் காணப்படுகின்றன. இதன் மூலம், முடி பிரச்னைகளை தவிர்க்கலாம்.

வெந்தயம் விதைகள்

வெந்தய விதைகளில் புரதம் மற்றும் நிகோடினிக் அமிலம் உள்ளது. இவை முடி வளர்ச்சிக்கு நல்லது. வெந்தய விதைகளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். கூந்தலை வலுவாகவும் அடர்த்தியாகவும் மாற்ற விரும்பினால், வெந்தய விதைகளை உட்கொள்ளலாம்.

பூசணி விதைகள்

துத்தநாகம், தாமிரம், வைட்டமின் ஏ, பி மற்றும் சி ஆகியவை பூசணி விதைகளில் காணப்படுகின்றன. இதன் மூலம், பலவீனமான முடியை பலப்படுத்தலாம். மேலும், முடியின் பொலிவு அதிகரிக்கும்.

சியா விதைகள்

புரதம், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்ற சத்துக்கள் சியா விதைகளில் காணப்படுகின்றன. இதனால் கூந்தலுக்கு பலம் கிடைப்பதுடன் இயற்கையான பிரகாசமும் தெரியும்.

பெருஞ்சீரகம் நன்மைகள்

பெருஞ்சீரகம் வயிறு மற்றும் முடிக்கு நன்மை பயக்கும். இதனை உட்கொள்வதன் மூலம் பல முடி பிரச்னைகளை தவிர்க்கலாம். இதில் உள்ள சத்துக்கள் முடி உதிர்வதை தடுக்கிறது.

முடி வளர்ச்சிக்கு இந்த விதைகளை உட்கொள்ளலாம். உடல்நலம் தொடர்பான அனைத்து தகவல்களுக்கும் onlymyhealth.comஐப் படிக்கவும்.