சுருண்ட மற்றும் சிக்கலான கூந்தல் பிரச்சனையை பலரும் சந்திக்கின்றனர். இந்நிலையில், முடி வளர்ச்சியை ஊட்டமளிக்கவும், மென்மையாக்கவும் முடி வளர்ச்சி சீரம் ஒன்றைத் தேர்ந்தெடுப்பது அவசியமாகும். இதில் சுருண்ட முடிக்கான எண்ணெய்களைக் காணலாம்
ஆர்கன் எண்ணெய்
இது முடி வளர்ச்சியை ஆதரிக்கவும், முடி அமைப்பை மேம்படுத்தவும் உதவுகிறது. மேலும், இது ஆழமாக நீரேற்றம் செய்வதை ஊக்குவிக்கவும், ஃபிரிஸை அடக்கும் திறனுக்காகவும் நன்கு அறியப்படுகிறது
ஆமணக்கு எண்ணெய்
இதில் ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது. இவை உச்சந்தலையில் ஊட்டமளிக்கவும், முடியை வலுப்படுத்தவும், ஆரோக்கியமான முடி வளர்ச்சியையும் ஊக்குவிக்கிறது
வைட்டமின் ஈ
இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் உச்சந்தலை ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இது முடி உதிர்வைக் குறைக்கவும், கட்டுப்படுத்தவும் உதவுகிறது
கெரட்டின்
கெரட்டின் புரதமானது முடி இழைகளை வலுப்படுத்துகிறது. இது முடி உதிர்வதைக் கட்டுப்படுத்தவும், ஆரோக்கியமான மற்றும் மென்மையான முடியின் வளர்ச்சியையும் ஆதரிக்கிறது
தேங்காய் எண்ணெய்
இது உச்சந்தலை மற்றும் முடியை ஈரப்பதமாக்குகிறது. இது உரித்தலைக் குறைக்கவும், முடியை வலுவாகவும், ஆரோக்கியமாகவும் வளர உதவுகிறது