குளிர்காலத்தில் பொடுகுத் தொல்லையை நீங்க இந்த எண்ணெய் தடவுங்க

By Gowthami Subramani
12 Dec 2024, 18:17 IST

குளிர்காலத்தில் காணப்படும் வறட்சி மற்றும் குளிர்ந்த காற்று காரணமாக பொடுகு மேலும் மோசமாகலாம். எனினும், சரியான எண்ணெயைத் தலைமுடிக்குப் பயன்படுத்துவது உச்சந்தலையை வளர்க்கவும், வறட்சியைத் தடுக்கவும் உதவுகிறது. இதில் பொடுகை போக்க உதவும் எண்ணெய்களைக் காணலாம்

ஆம்லா எண்ணெய்

இது வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களால் நிறைந்ததாகும். ஆம்லா எண்ணெயைப் பயன்படுத்துவது உச்சந்தலைக்கு ஊட்டமளித்து முடியை பலப்படுத்துகிறது. அதன் படி, உச்சந்தலை ஆரோக்கியத்தை மேம்படுத்துவது பொடுகைக் குறைக்க உதவுகிறது

தேங்காய் எண்ணெய்

இது ஈரப்பதம் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளுக்கு நன்கு பெயர் பெற்றதாகும். தேங்காய் எண்ணெயைத் தலைமுடிக்குப் பயன்படுத்துவது உச்சந்தலைக்கு ஊட்டமளித்து, வறட்சியைக் குறைக்கிறது. மேலும், இது பொடுகை உண்டாக்கும் பூஞ்சையை எதிர்த்துப் போராடுகிறது

வேப்ப எண்ணெய்

வேப்ப எண்ணெயில் அழற்சி எதிர்ப்பு மற்றும் பூஞ்சை காளான் பண்புகள் நிறைந்துள்ளது. இது பொடுகு மற்றும் குளிர் காலத்தில் உச்சந்தலையில் ஏற்படும் எரிச்சலை போக்க உதவுகிறது

ஆலிவ் எண்ணெய்

இது ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்ததாகும். எனவே இது உச்சந்தலையை ஆழமாக நீரேற்றமடையச் செய்து வறட்சியைத் தடுக்கவும், எரிச்சலைத் தணிக்கவும் உதவுகிறது

தேயிலை மர எண்ணெய்

தேயிலை மர எண்ணெயில் வலுவான பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் காணப்படுகிறது. இவை உச்சந்தலை அரிப்பை ஆற்றவும், பொடுகைக் குறைக்கவும் உதவுகிறது