முடி முழங்கால் வரை நீளமாக இருக்க இந்த எண்ணெயை முயற்சிக்கவும்

By Ishvarya Gurumurthy G
27 Aug 2024, 00:28 IST

முடி நீளமாகவும், அடத்தியாகவும் வளர வேண்டுமா.? இதற்கு வீட்டிலேயே எண்ணெய் தயாரிக்கலாம்.. அது எப்படி.. இங்கே காண்போம்.

தேவையான பொருட்கள்

நீளமான மற்றும் அடர்த்தியான கூந்தலுக்கு 200 கிராம் தேங்காய் எண்ணெய், 50 கிராம் வெந்தய விதைகள் மற்றும் 3-4 செம்பருத்திப் பூக்களை எடுத்துக் கொள்ளவும். இதில் ஏராளமான சத்துக்கள் காணப்படுகின்றன.

தயாரிக்கும் முறை

கடாயில் தேங்காய் எண்ணெயை சூடாக்கவும். இப்போது அதனுடன் வெந்தயத்தை சேர்த்து 2-3 நிமிடங்கள் சூடுபடுத்தவும். அதன் பிறகு செம்பருத்தி பூக்களை சேர்க்கவும். 5 நிமிடம் நன்றாக சூடுபடுத்தவும், பின்னர் அடுப்பை அணைக்கவும்.

தடவும் முறை

எண்ணெய் ஆறியவுடன் பாட்டிலில் சேமித்து வைத்துக் கொள்ளலாம். மேலும், அதைக் கொண்டு உச்சந்தலையில் மசாஜ் செய்தால் நல்ல முடி வளர்ச்சி கிடைக்கும். இந்த எண்ணெயை வாரத்திற்கு 2-3 முறை தடவலாம்.

உச்சந்தலையில் ஈரமாக்கும்

வெந்தயம் மற்றும் செம்பருத்தி எண்ணெயை தலைமுடிக்கு தடவுவது உச்சந்தலையில் ஈரப்பதத்தை பராமரிக்க உதவுகிறது, பொடுகு தடுக்கிறது மற்றும் வேர்களில் இருந்து முடியை பலப்படுத்துகிறது.

இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கும்

வெந்தயம் மற்றும் செம்பருத்தி எண்ணெயைப் பயன்படுத்துவது உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. இது முடி வளர்ச்சியை ஊக்குவிக்க உதவுகிறது.

முடி வேர்களை வளர்க்கும்

இரும்பு, புரதம் மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் வெந்தயம், செம்பருத்தி மற்றும் தேங்காய் எண்ணெயில் காணப்படுகின்றன. இதனை முடிக்கு தடவினால் முடியின் வேர்களில் இருந்து ஊட்டமளிக்கும்.

முடி அடர்த்தியானது

மருத்துவ குணங்கள் நிறைந்த இந்த எண்ணெயைத் தடவினால், முடி அடர்த்தியாகவும், வலுவாகவும், நீளமாகவும் இருக்கும்.