முடி சுருட்டையாக இருக்கா? இந்த எண்ணெயை யூஸ் பண்ணுங்க.

By Gowthami Subramani
18 Dec 2023, 12:46 IST

தேங்காய் எண்ணெய் கூந்தலுக்கு பல்வேறு வகையான நன்மைகளைத் தருகிறது. ஆனால், இது முடி சுருட்டை பிரச்சனைக்கும் உதவும் என்பது உங்களுக்குத் தெரியுமா? தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் சிலவற்றைக் குறித்து காண்போம்

பண்புகள்

இ்தன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் சில சுகாதார நிலைமைகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. கூந்தலுக்கு மட்டுமல்லாமல், சருமத்திற்கு சிறந்த மாய்ஸ்சரைசராக பயன்படுகிறது. அரிக்கும் தோழற்சி, எரிச்சல் போன்றவற்றிற்கு சிகிச்சையளிக்க உதவுகிறது

ஹேர் மாஸ்க்

தேங்காய் எண்ணெய் ஹேர் மாஸ்க் செய்வதன் மூலம், தலையில் உள்ள பொடுகு, அரிக்கும் தோலழற்சி அல்லது தடிப்புத் தோலழற்சி போன்ற பிரச்சனைகளை நீக்க முடியும்

முடி உதிர்வு பிரச்சனைக்கு

தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவது முடி உதிர்வைக் குறைப்பதுடன், முடி பலவீனமாக இருப்பதையும் குறைக்கிறது. முடி உடைவதைத் தடுக்க தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தலாம்

சுருள் முடிக்கு

சுருள் முடி கொண்டவர்களுக்கு அதிக எண்ணெய் பசை கொண்ட தலைமுடி இருக்கலாம். மேலும், உலர்ந்த முடி வறட்சியோடு இருக்கலாம். இதனை நேராக்க இயற்கையான முறையாக தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தலாம்