சில ஆரோக்கியமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த பழங்களை உட்கொள்வதன் மூலம் ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கலாம். இதில் முடி வளர்ச்சியைத் தூண்டும் பழங்களைக் காணலாம்
வாழைப்பழங்கள்
வாழைப்பழங்களில் பல்வேறு வைட்டமின்கள், பொட்டாசியம் மற்றும் இயற்கை எண்ணெய்கள் நிறைந்துள்ளது. இவை முடியின் மயிர்க்கால்களை வலுப்படுத்தவும், முடி உடைவதைக் குறைக்கவும், அடர்த்தியான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவுகிறது
பெர்ரி
ராஸ்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரிகள் போன்ற பெர்ரி பழங்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இவை முடியின் மயிர்க்கால்களை ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து பாதுகாக்கவும், முடி வளர்ச்சியை ஆதரிக்கவும் உதவுகிறது
சிட்ரஸ் பழங்கள்
ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் திராட்சைப்பழம் போன்ற சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி மற்றும் சிட்ரிக் அமிலம் போன்றவை நிறைந்துள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் அடர்த்தியான முடி வளர்ச்சியை ஊக்குவிக்க உதவுகிறது
பப்பாளி
பப்பாளிப்பழத்தில் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் ஈ மற்றும் என்சைம்கள் நிறைந்துள்ளது. இந்த ஊட்டச்சத்துக்களின் உதவியுடன் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும், முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் முடியும்
அவகேடோ
வெண்ணெய் பழம் என்ற அவகேடோவில் வைட்டமின் ஈ மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளது. இவை இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், முடி வளர்ச்சியை ஆதரிக்கவும் உதவுகிறது