முடியை வலுவாகவும், மென்மையாகவும் வைப்பதற்கு சில ஆரோக்கியமான எண்ணெய்கள் உதவுகிறது. இதில் முடி அடர்த்தியாகவும், தடிமனாகவும் வளர உதவும் எண்ணெய்களைக் காணலாம்
தேங்காய் எண்ணெய்
இதில் வைட்டமின் ஈ மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. இவை முடிவளர்ச்சியை ஊக்குவிக்கவும், முடி மற்றும் உச்சந்தலையை ஆரோக்கியமாகவும் வைக்க உதவுகிறது
ஆர்கன் எண்ணெய்
ஆர்கான் எண்ணெய் முடி வளர்ச்சிக்கான சிறந்த எண்ணெய்களில் ஒன்றாகும். இது தலைமுடி பிரச்சனைகளுக்கு இயற்கையான சிறந்த தீர்வாக அமைகிறது. மேலும், இதில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் முடியின் ஊட்டச்சத்துக்களை மீட்டெடுக்கவும் நிரப்பவும் உதவுகிறது
பாதாம் எண்ணெய்
பாதாம் எண்ணெயில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் மெக்னீசியம் முடி வளர்ச்சியை எளிதாக்குகிறது. இவை ஈரப்பதத்தை அளிக்கவும், முடி உதிர்வைத் தடுக்கவும் உதவுகிறது
ஆமணக்கு எண்ணெய்
முடி வளர்ச்சிக்கு சிறந்த எண்ணெய்களில் ஆமணக்கு எண்ணெயும் ஒன்றாகும். இதில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் ரிசினோலிக் அமிலம் போன்றவை மயிர்க்கால்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவுகிறது
எள் எண்ணெய்
எள் எண்ணெயிலும் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது. முடி வளர்ச்சிக்கான பல ஆயுர்வேத வைத்தியங்களில் எள் எண்ணெய் எள் எண்ணெயும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இவை முடி வளர்ச்சியை அதிகரிக்க, முடி மீண்டும் வளர விரும்புபவர்களுக்கும் ஏற்றதாகும்
லாவண்டர் எண்ணெய்
லாவெண்டர் எண்ணெயைத் தலைமுடிக்குப் பயன்படுத்துவது முடியின் மயிர்க்கால்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. மேலும், இது முடியை முழுமையாக மற்றும் அடர்த்தியாக வளர உதவுகிறது