இன்று பலரும் நீளமான, அடர்த்தியான முடியையே விரும்புகின்றனர். இதற்கு ஆரோக்கியமான சைவ உணவுகளைக் கையாளலாம். இதில் ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு நாம் சாப்பிட வேண்டிய சில சைவ உணவுகளைக் காணலாம்
கீரை
இதில் வைட்டமின் ஏ, சி, இரும்பு, ஃபோலிக் அமிலம் மற்றும் புரதம் நிறைந்துள்ளது. மேலும், இதில் மக்னீசியம், கால்சியம், பொட்டாசியம் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது. இவை முடி வளர்ச்சியை மேம்படுத்த உதவுகிறது
ஓட்ஸ்
ஓட்ஸ் ஆனது இரும்பு, நார்ச்சத்துக்கள், துத்தநாகம், பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது. இது முடி வளர்ச்சியை மேம்படுத்த மற்றும் அடர்த்தியாக வைக்க உதவுகிறது
கேரட்
கேரட்டில் வைட்டமின் ஏ ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது தலைமுடியை அடர்த்தியாகவும், வலுவாகவும், பளபளப்பாகவும் வைக்க உதவுகிறது. இவை உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து முடி உதிர்தல் மற்றும் உடைப்பைத் தடுக்கிறது
கொய்யா
இதில் வைட்டமின் சி ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது முடி உடைவதைத் தடுக்கிறது. இவை முடியை நீளமாகவும், வலுவாகவும், பளபளப்பாகவும் வைக்க உதவுகிறது
ஸ்ட்ராபெர்ரிகள்
ஸ்ட்ராபெர்ரி பழத்தில் வைட்டமின் சி நிறைந்து காணப்படுகிறது. இது கொலாஜன் உற்பத்தி மற்றும் இரும்பு உறிஞ்சுதலுக்கு உதவுகிறது. இவை முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும், முடியின் வலிமையை அதிகரிக்கவும் உதவக்கூடியதாகும்
வால்நட்ஸ்
வால்நட்ஸில் ஒமேகா 3 மற்றும் 6 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. இது முடியை வலிமையாக மற்றும் ஆரோக்கியமானதாக மாற்றுகிறது. மேலும் இதில் பயோட்டின், வைட்டமின் பி, ஈ, புரதம் மற்றும் மக்னீசியம் உள்ளது. இவை அனைத்துமே உச்சந்தலை ஆரோக்கியத்திற்கு உதவுகிறது
அவகேடோ
வெண்ணெய் பழங்கள் வைட்டமின் ஈ நிறைந்த சிறந்த ஆதாரமாகும். இதை தொடர்ந்து உட்கொள்வது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இது அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களின் சிறந்த மூலமாக இருப்பதால், முடியை நீளமாக மற்றும் வலுவாக வைக்கிறது