முடி உதிர்வைத் தடுக்க இந்த சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கோங்க

By Gowthami Subramani
15 Jan 2025, 17:03 IST

போதிய பராமரிப்பு மற்றும் ஊட்டச்சத்து இல்லாமையால் முடி உதிர்வு, முடி வறட்சி மற்றும் இன்னும் சில பிரச்சனைகளைச் சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. இதில் முடி உதிர்வைத் தடுத்து நிறுத்த நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய சில சப்ளிமெண்ட்ஸ்களைக் காணலாம்

பயோட்டின்

வைட்டமின் பி7 அல்லது பயோட்டின் கெரட்டின் உற்பத்தியை அதிகரிக்கிறது. இது ஆரோக்கியமான மற்றும் வலுவான கூந்தலுக்கு அவசியமாகும். இது நுண்ணறைகளின் வளர்ச்சி விகிதத்தை அதிகரிக்கவும், அடர்த்தியான மற்றும் ஆரோக்கியமான கூந்தலுக்கு ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது

ஃபோலிக் அமிலம்

செல் மீளுருவாக்கத்தை ஊக்குவிக்க ஃபோலிக் அமிலம் உதவுகிறது. இதன் மூலம் ஆரோக்கியமான, வேகமான முடி வளர்ச்சியைப் பெறலாம்

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்

இந்த சப்ளிமெண்ட்ஸ் உச்சந்தலையை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. மேலும், வீக்கத்தைக் குறைக்கவும், முடி அடர்த்தியை அதிகரிக்கவும் உதவுகிறது

கொலாஜன்

இது தலையின் நுண்ணறை அமைப்பை ஆதரிக்கிறது. மேலும் நெகிழ்ச்சித்தன்மையை ஊக்குவிக்கிறது. இதன் மூலம் வலுவான முடியைப் பெறலாம்

துத்தநாகம்

இது புரதத் தொகுப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் மூலம் முடியை சரிசெய்யவும் வலுப்படுத்தவும் உதவுகிறது. மேலும் இது ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கும் உடைப்பைத் தடுப்பதற்கும் அவசியமாகும்

வைட்டமின் பி12

இது சிவப்பு இரத்த அணுக்கள் உற்பத்தியை ஆதரிக்கும் சப்ளிமெண்ட்ஸ் ஆகும். இது முடியின் நுண்ணறைகளுக்கு ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. இதன் குறைபாடு முடி மெலிவதற்கு வழிவகுக்கலாம். இதன் சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்வதன் மூலம் முடி வளர்ச்சியை மீட்டெடுக்கலாம்

இரும்புச்சத்து

இரும்புச்சத்து குறைபாடு முடி உதிர்தலுக்கு வழிவகுக்கிறது. இதன் சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்வது மற்றும் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது முடி வளர்ச்சியை அதிகரிப்பதுடன், உயிர் சக்தியை மீட்டெடுக்க உதவுகிறது