சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து முடியை பாதுகாக்க இதை செய்யவும்...

By Ishvarya Gurumurthy G
15 May 2024, 14:06 IST

கோடையில், உங்கள் தலைமுடி வெப்பம் மற்றும் வெயிலின் காரணமாக பல சவால்களை எதிர்கொள்கிறது. முடியை பாதுகாக்க இதை செய்யவும்.

நீரேற்றம் முக்கியம்

முடியில் உள்ள இயற்கை எண்ணெய் முடியை நீரேற்றமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. இதனை கெடுக்கும் விதமான ஷாம்புகளை பயன்படுத்த வேண்டாம்.

UV கதிரிலிருந்து பாதுகாப்பு

புற ஊதா கதிர்கள் உங்கள் தலைமுடியின் ஈரப்பதத்தைத் தகர்த்து, மந்தமாகவும் உயிரற்றதாகவும் மாற்றும். தொப்பிகள் மற்றும் துப்பட்டா பயன்படுத்தி, இதில் இருந்து தப்பிக்கவும்.

கண்டிஷனிங் செய்யவும்

தலைமுடியில் உள்ள இயற்கை எண்ணெய்களை அகற்றாமல் அழுக்கு மற்றும் வியர்வையை சுத்தம் செய்ய மென்மையான ஷாம்பூ மற்றும் கண்டிஷ்னரை பயன்படுத்தவும்.

ரசாயனம் வேண்டாம்

தலை முடியை கலரிங்க் செய்வதை முடிந்த வரை தடுக்கவும். இதில் உள்ள ரசாயம் உங்கள் முடியை எளிதில் பாதிக்கிறது. மேலும் வறட்சிக்கு வழிவகுக்கிறது.

ஹீட் ஸ்டைலிங்கை தவிர்க்கவும்

ப்ளோ ட்ரையர்கள் மற்றும் பிளாட் அயர்ன்கள் போன்ற ஹீட் ஸ்டைலிங் கருவிகளைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துங்கள். இது முடியை சேதப்படுத்தும். மேலும் முடி உடைவை ஏற்படுத்தும்.

ஆரோக்கியமான உணவு

முடி ஆரோக்கியத்திற்கு உணவும் உதவலாம். வைட்டமின்கள் ஏ, சி, ஈ மற்றும் பயோட்டின் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கொண்ட உணவுகளை எடுத்துக்கொள்ளவும்.